நாகர்கோவில் செப்டம்பர் 25.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, M.Com, அவர்களுக்கு காவல்கிணறு சந்திப்பில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பிஜிருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதை தொடர்ந்து குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் அளவில் வாகன அணி வகுப்பாக அழைத்து வந்தனர்.
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் சந்திப்பில் நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர்கான், அவர்கள் தலைமையில் இளைஞர்கள் பட்டாளம் மஜக பொருளாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாநகர நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் பூங்கொத்து கொடுத்து மாநில பொருளாளர் அவர்களை வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் மாநில துணைச் செயலாளர் காயல்பட்டினம்
சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில், மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரகுமான், சாதிக் அலி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷெரீப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING #கன்னியாகுமரி_மாவட்டம்
25.09.2020