செப். 11, மத்திய பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான விவசாயத்தை அழிக்கின்ற அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்டத்தில் கிசான் நிதியுதவி திட்டத்தில் பலகோடிகள் முறைகேடு நடைப்பெற்றதைக் கண்டித்தும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையில் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு வந்திருந்த அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது. தமிழகமெங்கும் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று தபால் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம்.
Month:
அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்கும் கட்சி மஜக! புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!
செப் 11, நாகை மாவட்டம் திட்டச்சேரி மற்றும் புறாக்கிராமத்தில் மஜகவில் திரளான இளைஞர்களும், மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் கடந்த செப் - 9 அன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களை வரவேற்று அவர் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியில் உங்களை இணைத்துக் கொண்டதற்கு முதலில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் கடந்த ஐந்து மாதத்தில் எல்லோரும் ஊரடங்கிலே ஒரு வகையான சூழலில் பொழுது, மனிதநேய ஜனநாயக கட்சிதான் களத்தில் ; ஊரடங்கு விதிகளை மீறாத வண்ணம் ; அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. அது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமாக இருக்கலாம். காவிரி உரிமை மீட்புக்கான போராட்டமாக இருக்கலாம். வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை தாயகம் அழைத்து வருவதற்கான போராட்டமாக இருக்கலாம். பத்தாண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய அரசை வலியுறுத்திய போராட்டமாக இருக்கலாம். நான்கு வகையான பெரும் கொண்ட போராட்டங்களை நடத்தி தமிழக மக்களுடைய கவனத்தை ஈர்த்து, மத்திய-மாநில
குமரியில் மஜக சார்பில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம்!!
செப்.11., கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் YMJ இணைந்து பெண்கள் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், YMJ மாநில செயலாளர் அப்துல் ரகுமான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பெண் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் சபரிமாலா, அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சாதிக் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், YMJ மாவட்டத்தலைவர் கபீர், மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் காதர், மாவட்ட மகளிரணி பேச்சாளர் புஷ்ரா, ஜாபிரின், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_Wing #கன்னியாகுமரி_மாவட்டம் 10.09.2020
மாணவர் விக்னேஷ் தற்கொலை! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துக் கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். மாணவர் விக்னேஷ் அவர்களின் மரணம் நீட் தேர்வுக்கு எதிரான நடைமுறை சிக்கல்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. இத்தருணத்தில் ஒன்றை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம். தற்கொலை இதற்கு தீர்வல்ல. இது தங்களை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவ, மாணவிகள் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே வாழ்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை , தற்கொலை எதிர்ப்பு தினமான இன்று உறுதி மொழியாக முன்னெடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளை கேட்டுக் கொள்கிறோம். மாணவர் விக்னேஷ் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 10.09.2020
MJTS தலைமையக நியமன அறிவிப்பு! – விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட தலைவராக, ஆர்.முருகேசன் ராஜா த/பெ; இராமச்சந்திர ராஜா 172/149A தர்மாபுரம நடுத்தெரு இராஜபாளையம்.626117 அலைபேசி; 8248021668 மாவட்டச்செயலாளராக, எம்.நூர் முகம்மது த/பெ; மைதீன் அப்துல் காதர். 136. தர்மராஜா பெரிய தெரு. இராஜபாளையம்.626117 அலைபேசி; 6381040565 மாவட்டப்பொருளாளராக, எம். காசிம் த/பெ; எம்.மைதீன் பாட்சா 76. பள்ளி வாசல் தெரு. கூமாப்பட்டி. எஸ்.கொடிக்குளம். திருவில்லிபுத்தூர் தாலுகா ஆகியோர் பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், சலீமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 10-08-2020