மலேசியா.ஆக.22., மலேசியாவில் ஜொஹர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு அவரது உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ரியாஸ் அவர்களிடம் கோரினர். அதனடிப்படையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மஜக சார்பு அமைப்பான ஜொஹர் மனிதநேய கலாச்சாரப் பேரவைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக பீக்கர் அலி, அட்டாக் சுல்தான், அமீனுதீன், சாகுல், உள்ளிட்ட MKP-யினர் முன்னின்று நேற்று இரவு ஜொஹர் அடக்கத்தலத்தில் அவரது உடலை சட்ட ரீதியாக அடக்கம் செய்தனர். தாயகத்தில் உள்ள அவரது உறவினர் நஸீர், இதற்காக மஜக-வுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்து கொண்டார். தகவல், #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை, #தகவல்_தொழில்நுட்ப_அணி, ஜொஹர் - மலேஷியா 21-08-2020
Month:
வேலை இழந்துள்ளோருக்கு உதவிடும் கையெழுத்து இயக்கம்.. மஜக நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள்.!
நெல்லை.ஆக. 21., கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் தினக்கூலிகளாக வாழும் மக்கள் வேலையிழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர், மேலும் சிறு குறு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதனால் மத்திய அரசு அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி "தமிழ்நாடு அலையன்ஸ்" சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த 14-ஆம் தேதி துவங்கியது, இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அறிவித்தார்கள். அதனை தொடர்ந்து மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மேலப்பாளையத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா, முன்னால் மாவட்டச் செயலாளர் இக்பால், மாவட்ட MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான், வான்முகில் டிரஸ்ட் மதியழகன், சகோதரி மாரியம்மாள், மஜக மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் தமீம் அன்சாரி, மேலப்பாளைய நகர MJTS செயலாளர்
மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் கபசுரக்குடிநீர் மற்றும் முககவசங்கள் விநியோகம்!!
செங்கை:ஆக.21., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக கண்டோன்மெண்ட் நகரத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கும் நிகழ்வு நகரச் செயலாளா் தமிணா அவர்கள் தலைமையில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் எச்.அப்துல் சமது முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதாா் அவா்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் மற்றும் முககவசங்களை வழங்கினாா். இதில் மாவட்ட துணைச் செயலாளா்கள் தாம்பரம் ஜாகீர், தில்ஷாத், ஆலந்தூா் சலீம், அனகை அப்துல்லா, மாவட்ட அணி நிா்வாகிகள் பாரூக் மரைக்காயா், த.அப்துல்லா, பைசுல்லா, க. நகர பொருளாளா் நஜீா் பாஷா ஜாஃபா் சல்மான், நகரச் செயலாளர்கள் பல்லாவரம் ஷானவாஸ் முஸ்தாக், ஆலந்தூா் அல் அமீன், பம்மல் மக்பூல், அனகை சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனா் தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு_மாவட்டம் 21-08-2020
இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!
டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி நடை பெற்று வந்த மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் அப்பகுதியில் கடும் எதிர்ப்பை சந்தித்தன. தற்போது அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் ,தற்போது கடலோர மாவட்டங்களை குறிவைத்து ONGC போன்ற நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் ONGC . நிறுவனம் சார்பாக எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பாக எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மக்கள் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அப்பணிகளை துவக்கியுள்ளார்கள். மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நிறைந்து வாழும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியின் நீரும், நிலமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளை மதித்து ONGC நிறுவனம் தனது திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்கு!!அரசின் நிவாரண உதவியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் கோவை மஜகவினர்!!
கோவை: ஆக.20., கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க கோவை மாநகர் மாவட்ட மஜக வினர் முன் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தினர். இம்முகாம் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், அவர்களின் மேற்பார்வையில் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஹாரூன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் வியாபாரிகளுக்கு, அரசின் நிவாரண கடன் தொகை வழங்க ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பம் அனுப்பப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அரசின் சார்பில் உரிய அடையாள அட்டையுடன் நிவாரண கடன் தொகை வழங்கப்படும். இதன் மூலம் கொரோனாவால் வேலை இழந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மஜக வினரின் இம்முயற்சிக்கு நடைபாதை வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெரும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 19.08.2020