திருச்சி:ஆக.04., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சேவை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கத்தாரிலிருந்து இராமநாதபுரம், மற்றும் அரியலூர், மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் வயதான மூதாட்டி, ஆகியோர் துணையில்லாமல் தனியாக திருச்சி விமான நிலையம் வருவதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் திருச்சி மஜக விமான நிலைய சேவைக்குழுவினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர் பாபுபாய், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் காதர், ஆகியோர் விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்று வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். மேலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்த அதிகாரிகள் திருச்சியிலேயே தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்ப முயற்சித்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசிய மஜக-வினர் கர்ப்பிணிப் பெண் மற்றும் மூதாட்டி குறித்து எடுத்துக்கூறி அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அவர்களை சொந்த ஊரில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று வாகனம் ஏற்பாடு செய்து மஜகவினர் அவர்களை வழியனுப்பி
Month:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சேலத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!
சேலம்:ஆக.04., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் சர்புதீன், அவர்கள் அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் சனாவுல்லாகான், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஹசன், மாவட்ட பொருளாளர் விக்னேஷ், மாவட்ட துணை செயலாளர் சாகுல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஷா, மாவட்ட செயலாளர் தஸ்தகீர், மாவட்ட இளைஞரணி பொருளாளர் யாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அஷ்ரப், கொண்டாலம்பட்டி பகுதி செயலாளர் மைதீன், பொருளாளர் சரத்குமார், துணை செயலாளர் சவுக்கத் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாவட்டம் 04.08.2020
குவைத் மண்டலம் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி.!
குவைத்-ஆகஸ்ட்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ZOOM காணொளி மூலம் 31-07-2020 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்க மண்டல துணைச் செயலாளர் மாயவரம் சபீர் அஹமது அவர்கள் நீதிபோதனை வழங்க கோணுலாம்பள்ளம் அன்சாரி வரவேற்ப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி J.S.ரிபாய் ரஷாதி அவர்கள் "நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் Zoom காணொலி மூலம் திரளான மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தூம் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல் : #மனிதநேய_கலாச்சார_பேரவை #குவைத்_மண்டலம் 31-07-2020
மஜக சொந்தம் இதயத்துல்லாவுக்காக பிரார்த்திப்போம்!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் பதிவு!
அரியலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளராக பணியாற்றிய அருமை சகோதரர் இதயத்துல்லாஹ், அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். புன்சிரிப்புடன் உற்சாகமாக பொது சேவையாற்றிய அவரது மறைவு, அம் மாவட்டத்தில் நம் கட்சிக்கு பேரிழப்பாகும். வாழும் வயதில் அவரை பறிகொடுத்த அவரது குடும்பத்தினர் மற்றும் அரியலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் எமது இரங்கலை கூறி, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி O1.08.2020