ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்களின் சுதந்திரத்திற்கு தமிழகத்தில் மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. NEWS 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் பலர் ஃபாஸிஸ சக்திகளின் நெருக்கடிகளுக்கு பலியாகியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் சில ஊடகங்களில் பணியாற்றும் தமிழ் உணர்வு கொண்ட நிர்வாகிகளும், செய்தியாளர்களும் இதே போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்கள் தகுதி குறைப்பு அல்லது பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் , அந்த இடங்களில் சமூக நீதி சிந்தனைகளுக்கு எதிரானவர்களை பணியில் அமர்த்த சதி நடப்பதாகவும் கூறப்படுகிறது வட இந்தியாவில் ஊடகங்களை கைப்பற்றியது போல தமிழகத்திலும் அவ்வாறு செய்திட ஃபாஸிஸ்டுகள் முயல்வது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, நம் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. சுதந்திரம், ஜனநாயகம், நீதி , உண்மை ஆகியவைதான் ஊடகவியலர்களின் முகவரிகளாகும். இதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் , கொல்லைப்புறம் வழியாக ஊடகங்களை கைப்பற்றி, தங்கள் சித்தாந்தங்களை புகுத்த துடிக்கிறார்கள். இவர்களின் வஞ்சக சதிகளுக்கு தமிழக மக்கள் ஒரு காலத்திலும் உடன்பட மாட்டார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். சமூக நீதி கண்ணோட்டத்தோடும், மனித உரிமை பற்றிய அக்கறையோடும் செயல்படும் ஊடகவியளர்களை பாதுகாப்பது தமிழக மக்களின் கடமையாகும். இவ்விஷயத்தில் ஜனநாயக சக்திகளோடு இணைந்து மனிதநேய
Month:
வன்னியர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு – மஜக வின் வாழ்த்துக்கள்
கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நவீன வாகனங்கள் மூலம்!!கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மஜக வினர்!!
ஜூலை:20., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத் தொடர்ந்து மஜக கோவை மாநகர் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் இளைஞரணி சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கரும்புக்கடை, சாரமேடு, சலாமத் நகர், இலாஹி நகர், வள்ளல் நகர், பிலால் எஸ்டேட், பாத்திமா நகர், அல்-அமீன் காலனி, புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட், உக்கடம் பேருந்து நிலையம், உக்கடம் காவல் நிலையம், வின்சென்ட் ரோடு, ஹவுஸிங் யூனிட், பெருமாள் கோயில் வீதி ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், அபுதாஹீர், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் இப்ராஹீம், விவசாய அணி மாவட்ட செயலாளர் விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் செய்யது, மற்றும் M.I.அக்கீம், அபு, சுவனம் அபு,
ஊரடங்கில் உணவின்றி தவித்த நோயாளிகளின் உறவினர்கள்! இலவசமாக உணவு தயார் செய்து விநியோகித்த மஜக!
ஜூலை.19, தமிழகமெங்கும் ஞாயிற்றுகிழமை அன்று முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உள்நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் வெளி நோயாளிகள் உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை அறிந்த திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் சுமார் 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து மாவட்ட செயலாளர் பாபுபாய் தலைமையில் விநியோகம் செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆழ்வார்தோப்பு காதர், பஜார் பக்ருதின், இளைஞரணி மாவட்ட செயலாளர் புரோஸ் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஷாருக்கான், இளைஞரணி நிசார், ரியாஸ்கான், முகமது ரியாஸ், ஆழ்வார்தோப்பு உசேன், மாமு ஜாகிர் உசேன், இஸ்மாயில் உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
கலவரங்களை தூண்டுவோரை தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி சிவகங்கை மஜகவினர் புகார் மனு..!
சிவகங்கை.ஜூலை.19., தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும் கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையில் சென்ற மஜக நிர்வாகிகள், இருவரையும் தனி தனியே சந்தித்து குறிப்பிட்ட புகார் மனுவை அளித்தனர். இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், இளையான்குடி நகர பொறுப்பாளர்கள் பஷிர் அகமது, சிராஜூதீன் மற்றும் நெய்னா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 18-07-2020