ஜூலை.22, திருவாரூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் புலிவலத்தில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமையில், பொருளாளர் சேக் அப்துல்லா மற்றும் துணைச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் தங்க வைக்கப்படும் தனிமைப்படுத்தும் முகாம்களில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கலைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாரளிப்பது, பொதுமக்களுக்கு கிளைகள் தோறும் கபசுர குடிநீர் விநியோகிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 20/07/2020
Month:
கோவையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்திய மஜக வினர்!!
கோவை:ஜூலை.22., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனம் மூலம் அன்பு நகர், பொன்விழா நகர், ஜி எம் நகர், வின்சென்ட் ரோடு, சாமியார் புது விதி, டவுன் ஹால் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல், மற்றும் M.I.அக்கீம், அபு, அப்பாஸ், சேட், குமார், முஸ்தபா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 21.07.2020
மஜக தேனி மாவட்ட ஆலோசனை கூட்டம்!!
தேனி:ஜூலை.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பெரியகுளம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மீது தொடர் பொய் வழக்குப் போடும் காவல்துறையை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, மேலும் அது குறித்து சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம்,பெரியகுளம் நகரத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையுடன் இணைந்து கபசுர குடிநீர், கிருமி நாசினிகள் தெளிக்கவும் மற்றும் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்த உடல்களை சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி நல்லடக்கம் செய்ய மஜக சார்பில் மருத்துவ சேவை அணி குழு அமைக்கப்பட்டது. மேலும் ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மமக மாநில அமைப்புச் செயலாளருமான சகோ அஸ்லம் பாஷா, அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சேக்பரீத், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கம்பம் கலீல், பெரியகுளம் ஒன்றிய
தஞ்சை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் – மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக, 1) இளைஞரணி மாவட்டச் செயலாளர், சாஜித் சோழபுரம் அலைபேசி; 8220803554 2) தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர், முஹம்மது யாசின் மேலக்காவேரி அலைபேசி; 9047670470 3) மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர், முஹம்மது அலி பண்டாரவாடை அலைபேசி; 8248533832 4) மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) மாவட்டச் செயலாளர், சிராஜ்தீன் மேலக்காவேரி அலைபேசி; 9790076132 5) மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாவட்டச் செயலாளர், முஹம்மது இஸ்மாயில் (பாபு) அலைபேசி; 8825737170 6) மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்டச் செயலாளர், ஜஹாங்கிர் கும்பகோணம் அலைபேசி; 8903233538 7) இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) மாவட்டச் செயலாளர், அல்லாபக்ஸ் கும்பகோணம் அலைபேசி; 9865361254 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 21-07-2020
அன்பின் உறவு அஸ்லம் பாஷா மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
மமக-வின் மாநில அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, அன்பின் உறவு அஸ்லம் பாஷா அவர்களின் மரணச் செய்தி அறிந்து அனைவரும் ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்து நானும், மஜக-வின் தலைமை நிர்வாகிகளும் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி தைரியப்படுத்தினோம். இன்று அவர் நம்மிடமிருந்து விடைப் பெற்று, இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். கடைசியாக நானும், அவரும் கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோம். அதுதான் நான் அவரை கடைசியாக சந்தித்த நிகழ்வாகும். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தப்போது, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவரை ஒரு வாரம் அழைத்து சென்று சுற்றிக் காட்டினேன். எனது உறவுகளையும், நண்பர்களையும் அறிமுகப்படுத்தினேன். அது போல் என்னோடு பல பொதுக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். நீண்ட தூர பயணங்களில் ஒன்றாக தங்கியிருக்கிறோம். எத்தனையோ கருத்துகளை பரிமாறியிருக்கிறோம். அந்த பயண நினைவுகள் எல்லாம் இப்போது நெஞ்சில் அலை பாய்கிறது. பொது வாழ்வில் நீண்ட காலம் பயணிக்க வேண்டியவரின் வாழ்வு நடுத்தர வயதிலேயே முற்றுப் பெற்றது சோகமான ஒன்று. முன்பு ஒரே முகாமில் பணியாற்றிய ஒரு சகோதரரை இழந்திருக்கும்