தேனி:ஜூலை.22.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பெரியகுளம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மீது தொடர் பொய் வழக்குப் போடும் காவல்துறையை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, மேலும் அது குறித்து சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம்,பெரியகுளம் நகரத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையுடன் இணைந்து கபசுர குடிநீர், கிருமி நாசினிகள் தெளிக்கவும் மற்றும் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்த உடல்களை சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி நல்லடக்கம் செய்ய மஜக சார்பில் மருத்துவ சேவை அணி குழு அமைக்கப்பட்டது.
மேலும் ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மமக மாநில அமைப்புச் செயலாளருமான சகோ அஸ்லம் பாஷா, அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சேக்பரீத், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கம்பம் கலீல், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுபக்கர் சித்திக், மற்றும் கம்பம், உத்தமபாளையம், தேவாரம், பெரியகுளம், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தேனி_மாவட்டம்
21.7.2020