ஜுலை-24 நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாடு மற்றும் புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது. இதில் நாகை தொகுதியை சேர்ந்த புலம் பெயர்ந்த மக்களின் எதிர்கால நலன் கருதி விவசாயம், தொழில்துறை, கால்நடை, சிறு குறு தொழில்கள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியன குறித்து அதிகாரிகளுடன் அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெற்றது. இதில் DIC துணை பொதுமேலாளர் திரு. கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சியை சேர்ந்த திரு.செல்வம், விவசாயத்துறை இணை இயக்குனர் திரு.பன்னீர், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் Dr. சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் மேற்கண்ட ஒவ்வொரு துறையின் சார்பிலும் காணொளி கருத்தரங்கம் துறை சார்ந்த அதிகாரிகளை வைத்து நடத்துவது என்றும், அதில் தொழில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கொரோணா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்வோருக்கும், பிற மாநிலங்களிலிருந்து வேலையில் இருந்து திரும்பியவர்களுக்கும் இந்த வழிகாட்டல் முகாம் பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிடதக்கது. தகவல், நாகை
Month:
சவூதியிலிருந்து IKP ஏற்பாட்டில் விமானம் வருகை! திருச்சி மஜக நிர்வாகிகள் பயணிகளை வரவேற்றனர்.
ஜூலை.24, மஜகவின் சார்பு அமைப்புகளில் ஒன்றான IKP சார்பில் விமான ஏற்பாடு நடைப்பெற்றது. IKP யின் மாநில செயலாளர் கோவை இசாக் மற்றும் ரியாத் மண்டல செயலாளர் ஹாஜாகமருதீன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். நேற்று நள்ளிரவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளை மஜக திருச்சி மாவட்ட செயலாளர் பாபுபாய் தலைமையில் துணைச் செயலாளர்கள் பகுருதீன், ஜமாலுதீன், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், ஆழ்வார்தோப்பு நிர்வாகி ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இச்சிறப்பு விமானத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தந்ததற்காக திருச்சி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., நன்றிகளை தெரிவித்து கொண்டார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
கோவை ESI மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மஜக வினர்!!
ஜூலை:24., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனம் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் ESI மருத்துவமனை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காவல் நிலையம், பள்ளிவாசல் தெரு, கிழக்கு மண்டல அலுவலகம், போயர் குல மாரியம்மன் கோயில், கிருஷ்ணா கார்டன், ரிலையன்ஸ் கார்டன், வரதராஜபுரம், நீலிகோணம் பாளையம், திருச்சி ரோடு, ராமநாதபுரம் காவல் நிலையம், ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். இப்பணியில் மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், சிங்காநல்லூர் கிளைச் செயலாளர் ஹைதர், கிளை இளைஞரணி செயலாளர் பைசல், மற்றும் M.I.அக்கீம், அபு, சுவனம் அபு, சேட், அசாருதீன், அப்பாஸ், உள்ளிட்டோர் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம். 23.07.2020
சிதம்பரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்மணி மரணம்! மஜக நிர்வாகிகள் பங்கேற்று உடல் நல்லடக்கம்!
ஜூலை.23, சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இன்று காலை மரணமடைந்தார். இறந்தவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க அப்பெண்மணியின் உடலை சிதம்பரம் பகுதியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் பெற்று உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர். இதில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மஜக மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, வார்டு கிளை நிர்வாகிகளும் மஜக செயல்வீரர்களும் திரளாகப் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சிதம்பரம்_நகரம். #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
திருச்சி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA ஆறுதல்!
ஜூலை.23, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகிலுள்ள சிறுகனூரில் ஓரே குடும்பத்தை சேர்ந்த அக்கா (11), தம்பி (7) மற்றும் சிறுமி (11) உள்ளிட்ட மூவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து அறிந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அக்குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு திருச்சி மாவட்ட மஜகவினரை கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் பாபுபாய் தலைமையில் இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், மாணவர் இந்தியா செயலாளர் ஷாருக்கான் ஆகியோர் சென்று குழந்தைகளை இழந்த இரண்டு குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், பொதுச்செயலாளர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு அக்குடும்பத்தினருடன் பேச வைத்தனர். அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பொதுச் செயலாளரிடம் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மஜக நிர்வாகிகள் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களிடம் இதுக்குறித்து பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அக்குடும்பத்திற்கு முதல்வரின் காப்பீட்டு நிதி கிடைத்திடவும் வலியுறுத்தினர். நாளை இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரையும் மஜகவினர் சந்திக்க உள்ளது