ஜூலை.23,
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகிலுள்ள சிறுகனூரில் ஓரே குடும்பத்தை சேர்ந்த அக்கா (11), தம்பி (7) மற்றும் சிறுமி (11) உள்ளிட்ட மூவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அக்குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு திருச்சி மாவட்ட மஜகவினரை கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் பாபுபாய் தலைமையில் இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், மாணவர் இந்தியா செயலாளர் ஷாருக்கான் ஆகியோர் சென்று குழந்தைகளை இழந்த இரண்டு குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், பொதுச்செயலாளர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு அக்குடும்பத்தினருடன் பேச வைத்தனர்.
அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பொதுச் செயலாளரிடம் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து மஜக நிர்வாகிகள் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களிடம் இதுக்குறித்து பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அக்குடும்பத்திற்கு முதல்வரின் காப்பீட்டு நிதி கிடைத்திடவும் வலியுறுத்தினர்.
நாளை இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரையும் மஜகவினர் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.
22/07/2020