தொழில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு!நாகை தொகுதியில் மு.தமிமுன் அன்சாரி MLA திட்டம்!





ஜுலை-24
நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாடு மற்றும் புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது.

இதில் நாகை தொகுதியை சேர்ந்த புலம் பெயர்ந்த மக்களின் எதிர்கால நலன் கருதி விவசாயம், தொழில்துறை, கால்நடை, சிறு குறு தொழில்கள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியன குறித்து அதிகாரிகளுடன் அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெற்றது.

இதில் DIC துணை பொதுமேலாளர் திரு. கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சியை சேர்ந்த திரு.செல்வம், விவசாயத்துறை இணை இயக்குனர் திரு.பன்னீர், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் Dr. சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரைவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் மேற்கண்ட ஒவ்வொரு துறையின் சார்பிலும் காணொளி கருத்தரங்கம் துறை சார்ந்த அதிகாரிகளை வைத்து நடத்துவது என்றும், அதில் தொழில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கொரோணா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்வோருக்கும், பிற மாநிலங்களிலிருந்து வேலையில் இருந்து திரும்பியவர்களுக்கும் இந்த வழிகாட்டல் முகாம் பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிடதக்கது.

தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.