ஜூலை:03., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உக்கடம் பேருந்து நிலையம், கெம்பட்டி காலனி, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், ஆகிய பகுதிகளில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H. ஜாபர் அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் ஹக்கீம், அபு, சுவனம் அபு, சிராஜுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். இதில் வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள், என சுமார் 800க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம். 03.07.2020
Month:
சவூதிவாழ் தமிழர்களின் சிறப்பு விமானம் தரைஇறங்க விரைந்து அனுமதி தேவை! தமிழக அரசிடம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
ஜூலை 03, சவூதியில் உள்ள தமிழ் நாடு (NRI ) பெற்றோர்கள் சங்கம் சார்பில் தாயகம் திரும்ப சார்ட்டர்டு விமானம் (6E 8929) தம்மாமிலிருந்து புறப்பட்டு திருச்சி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தரை இறங்கும் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக முகவை.சீனி அவர்கள் மஜகவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது குறித்து தமிழக அரசின் சிறப்பு அதிகாரி திரு.செந்தில் IAS மற்றும் முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். விரைந்து ஏற்பாடு செய்வதாக அவர்கள் பதில் அளித்துள்ளனர். இது போல் சவூதியிலிருந்து மனிதநேய சொந்தங்களால், IKP ஏற்பாட்டில் அங்குள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளிலிருந்தும் சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குவைத்திலிருந்து MKP சார்பில் கடந்த வாரம் முதல் சிறப்பு விமானம் திருச்சி வந்த நிலையில், இரண்டாவது சிறப்பு விமானம் ஏற்பாடாகி வருவது குறிப்பிடத்தக்கது. கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுடன் பயணிகள் சிறப்பு சார்ட்டர்ட் விமானங்களை பதிவு செய்து
புருணையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வந்த தமிழர்கள்!! கோவையில் வரவேற்று உதவிகள் செய்த மஜகவினர்!!
ஜுலை:03., கொரோனா இடையூறுகளால் தாயகம் வர பல இடையூறுகளை கடந்து புருணையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி, கேரளா, தஞ்சை, நாகப்பட்டினத்தை, சேர்ந்தவர்கள் கோவை விமான நிலையம் வந்தனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்களின் அறிவுத்தலில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், ஆகியோரின் ஆலோசனையின் பேரில், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், ஆகியோர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். பின்பு அரசு விதிகளின்படி அவர்கள் தனிமைப்படுத்து தலில் தங்கவைக்கப்பட்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 03.07.2020
சிறுமிக்கு நேர்ந்த நிலையறிந்து தமிழகமே கலங்குகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் ஏம்பல் எனுமிடத்தில் ஜெயப்பிரியா என்ற 7 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அறிந்து தமிழகமே பதறுகிறது. அந்த ஏழை சிறுமியின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழும் காட்சிகள் அனைவரையும் கலங்க செய்கிறது. நாகரீக சமூகத்தில் இது போன்று நடக்கும் கேடுகெட்ட நிகழ்வுகள் பண்பியல் வீழ்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது இந்த பாதக செயலில் ஈடுபட்ட கயவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, உச்சபட்ச தண்டனையை வழங்க தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அக்குடும்பத்திற்கு ஆறுதல் நிதியாக 5 லட்சம் வழங்கியிருப்பதை வரவேற்கும் நிலையில், அக்குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை ஒன்றையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேயஜனநாயககட்சி 03.07.2020
துபாயிலிருந்து வருகைதந்த கர்ப்பிணி மற்றும் பெண்ணிற்கு உதவிய, மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழு!
துபாயிலிருந்து கர்ப்பிணி மற்றும் இளம்பெண் இணைந்து தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களை வரவேற்க வர உறவினர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்பட்ட நிலையில் ஏனங்குடி மஜகவினரை தொடர்பு கொண்டனர். அவர்கள் திருச்சி மஜக விமான நிலைய சேவைக் குழுவை தொடர்பு கொண்டு அப்பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். தகவலறிந்த மஜக மாவட்ட செயலாளர் பாபுபாய் அவர்களின் தலைமையில் பொருளாளர் சேக்தாவூத், துணைச் செயலாளர்கள் காதர், பகுருதீன், இளைஞரணி செயலாளர் புரோஸ் கான், மருத்துவ சேவை அணி செயலாளர் அபூ உள்ளிட்டோர் நள்ளிரவில் வருகை தரும் விமானத்திற்காக காத்திருந்து வரவேற்றனர். தொடர்ந்து அடிப்படை சோதனைகளை முடித்து கொண்டு தாசில்தார் அவர்களின் அனுமதி பெற்று நாகை மாவட்டத்தில் தனிமைப்படுத்தி கொள்ள ஏதுவாக வாகன ஏற்பாடு செய்ததுடன் நாகப்பட்டினம் வரை பாதுகாப்பாக அழைத்து வந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வசம் ஒப்படைத்தனர். பாதுகாப்பாக அழைத்து சென்று ஒப்படைத்த அணி செயலாளர்கள் புரோஸ்கான் மற்றும் அபூ ஆகியோரிடத்தில் மஜக வினர் உதவிக்கு மனப்பூர்வமான நன்றியினை அப்பெண்களின் உறவினர்கள் தெரிவித்தனர். நாகையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலை தொடர்ந்து அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம். 02/07/2020