ஜூலை.07, இன்று தமிழ்நாடு ஹஜ் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. இக்குழுவுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்வு நடைபெறும். அதன்படி மீண்டும் ஜனாப். A.அப்துல் ஜப்பார் அவர்கள் இதற்கு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில் zoom காணொளி வழியே மஜக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் குழு உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். அப்போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு விமான நிலையம் அருகாமை பகுதியில் ஹஜ் இல்லம் கட்ட சட்டசபையில் தான் பேசியதையும், பிறகு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை சந்தித்து இதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதையும், அவ்வாறே முதல்வர் அவர்கள் நிதி ஒதுக்கியுள்ளதையும் நன்றியுடன் நினைவு கூறுவதாகக் குறிப்பிட்டார். எனவே இதற்கு இடம் தேர்வு செய்து, காலம் தாழ்த்தாமல் புதிய ஹஜ் கட்டிடம் கட்ட, அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தலைமையில் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் மீண்டும் தமிழக ஹஜ் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக அப்துல் ஜப்பார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் முகம்மது ஜான் MP, அபுபக்கர் MLA,(zoom) ஜவஹர் அலி, லியாக்கத் அலி கான்
Month:
மஜக மதுரை மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்..!
ஜூலை.07., கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, போர்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் இரண்டாம் கட்டமாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, காலை 7மணி முதல் மாவட்டச்செயலாளர் இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் புதூர் கனி ஆகியோர் தலைமையில் மாவட்டப் பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் சுலைமான், கோடை அப்துல் மஜீத், சதாம் உசேன், தொழிளாளர் அணி செயலாளர் பஷீர்கான், 28-வது வட்டச்செயளாலர் சுல்தான் பாட்ஷா ஆகியோர் பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்கள் கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம் 07-07-2020
தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள் !
சிதம்பரம். ஜூலை.07, கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிபடை மற்றும் பூதகேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான நவீன், அபுல் ஹசன், சைபுல்லாஹ், அஷ்ரப், ஹஜ்ஜி, ஹாலித் உள்ளிட்டோர் மஜகவின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் ஹாஜா மைதீன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பூதகேணி கிளை செயலாளர் யாசீன் முன்னிலையில் இணைந்தவர்களுக்கு மஜக நிர்வாகிகள் அட்டைகளை வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, அணி, சிதம்பரம் நகர, பரங்கிப்பேட்டை பேரூர், கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம். 06/07/2020
கோவை சிங்கை தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய மஜக வினர்!!
ஜூலை:06., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், ESI மருத்துவமனை, உப்பிலிபாளையம், சௌரிபாளையம், பகுதிகளில் மாவட்ட துணைச் செயலாளர் சிங்கை சுலைமான், அவர்கள் தலைமையில் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் முன்னாள் நிர்வாகிகள் M.I.ஹக்கீம், அபு, சுவனம் அபு, சிராஜுதீன், அசார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை, வழங்கினர். இதில் வணிகர்கள், வியாபாரிகள், ஓட்டுனர்கள், பொதுமக்கள், என சுமார் 1000க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம். 06.07.2020
நாகூரில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.06, நாகை மாவட்டம், நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தர்கா அலங்கார வாசலில் நகரச் செயலாளர் அபுசாலி சாஹிப் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முதற்கட்டமாக இந்நிகழ்வில் வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள் என சுமார் 250 க்கும் அதிகமானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடு,வீடாக விநியோகிக்கும் பணி நடைப்பெற உள்ளது. இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ஆரிஃப், நாகூர் ஜாகிர் உசேன், நகர பொருளாளர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் சவுக்கத்அலி, வார்டு செயலாளர்கள் சதாம் ஹுசைன், சம்சுதீன், ஹஜ்ஜி முஹம்மது உட்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 06/07/2020