ஜூலை:06.,
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், ESI மருத்துவமனை, உப்பிலிபாளையம், சௌரிபாளையம், பகுதிகளில் மாவட்ட துணைச் செயலாளர் சிங்கை சுலைமான், அவர்கள் தலைமையில் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.
இதில் இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் முன்னாள் நிர்வாகிகள் M.I.ஹக்கீம், அபு, சுவனம் அபு, சிராஜுதீன், அசார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை, வழங்கினர்.
இதில் வணிகர்கள், வியாபாரிகள், ஓட்டுனர்கள், பொதுமக்கள், என சுமார் 1000க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்.
06.07.2020