நாகூரில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!

ஜூலை.06,
நாகை மாவட்டம், நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தர்கா அலங்கார வாசலில் நகரச் செயலாளர் அபுசாலி சாஹிப் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வை மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

முதற்கட்டமாக இந்நிகழ்வில் வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள் என சுமார் 250 க்கும் அதிகமானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடு,வீடாக விநியோகிக்கும் பணி நடைப்பெற உள்ளது.

இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ஆரிஃப், நாகூர் ஜாகிர் உசேன், நகர பொருளாளர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் சவுக்கத்அலி, வார்டு செயலாளர்கள் சதாம் ஹுசைன், சம்சுதீன், ஹஜ்ஜி முஹம்மது உட்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டு விநியோகம் செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
06/07/2020