மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட அணி நிர்வாகிகளாக, 1) மாவட்ட இளைஞரணி செயலாளராக, S.அயூப் கான் த/பெ; சாகுல் ஹமீது கம்பம். அலைபேசி; 88258 58119 2) MJTS மாவட்ட தலைவராக, S.முகம்மது தாஹா த/பெ; சுலைமான் சேட் கம்பம். அலைபேசி; 86681 13176 3) MJTS மாவட்டச் செயலாளராக, S.இம்ரான் கான் த/பெ; சுல்தான் மைதீன் பெரியகுளம். செல் : 77089 08046 4) மாவட்ட விவசாய அணி செயலாளராக, K.A.சகுபர் சாதிக் த/பெ; K.அப்துல் ரஹ்மான் கம்பம். அலைபேசி; 98651 13811 5) மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளராக, A.நவாஸ் த/பெ; அல்லாபிச்சை கம்பம். அலைபேசி; 90437 73936 6) மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளராக A.சலீம் ராஜா த/பெ; அப்துல் கபூர் பெரியகுளம். அலைபேசி; 80721 13390 7) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் A.ஆஜி (எ) ரஹ்மத்துல்லா த/பெ; அமீர் பாட்ஷா பெரியகுளம். அலைபேசி; 99409 08776 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 30-07-2020
Month:
ஆபத்துகள் சூழ்ந்த புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
நாடு முழுக்க எதிர்ப்புகளை சந்தித்த மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது. சாமானியர்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளே துணை நின்றன. இப்போது அதற்கும் பொது நுழைவுத் தேர்வு என்பது ஏற்க முடியாததாகும். நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி கடினமாக்கப்பட்டது போல, இது கலை, அறிவியல் படிப்புகளையும் கடினமாக்கிடும் முயற்சியாகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய தேர்வு முகமையின் மூலமே பொது நுழைவுத் தேர்வு என்ற முடிவு பெரும் பாதிப்புகளை உருவாக்கும். மும்மொழி கல்வி திட்டம் என்ற போர்வையில் மொழி ஆதிக்க திணிப்புக்கு திட்டமிடப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் தேசிய கல்வி ஆணையம் நாட்டின் அனைத்து கல்விகளுக்குமான உயர் பீடமாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் இது கண்காணிக்கும் என்பதோடு, கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பாடத் திட்டங்கள் உருவாக்கல் , நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்தையும் இதுவே தீர்மானிக்கும் என்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வித்துறைகளை செயலிழக்க
கொரோனாவில் இறந்தவர்களின் முகத்தை பார்க்க குடும்பத்தினரை அனுமதிக்க_வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.!
கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களின் இறுதி சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின்படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளது. இது மதிக்கப்படும் அதே வேளையில், அக்குடும்பத்தினரின் நியாயமான சில எதிர்பார்ப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக, இறந்தவர்களின் முகத்தை இறுதியாக பார்க்க சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நியாயமான விருப்பமாகும். தங்கள் பாசத்திற்குரியவர்களின் உயிர்களை இழந்து நிற்கும் உறவுகளின் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, இறந்தவர்களின் முகத்தை பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். பொது நலன் கருதி, அவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் வர நிபந்தனை விதிக்கலாம். இது குறித்து தமிழக அரசு மனிதாபிமானத்தோடு நல்ல முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 29.07.2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்டச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்டச் செயளாளராக, P.புகாரி அலைபேசி; 9500291207 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 28-07-2020
கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
கோவை: ஜூலை.28 மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், என தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி ஜி.எம். நகரை சேர்ந்த சகோதரர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH. ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், ஆகியோர் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ், மற்றும் ஹக்கீம், அபு, சுவனம் அபு, ஆகியோர் உடனிருந்தனர்.. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 27/07/2020