கோவை: ஜூலை.28
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், என தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி ஜி.எம். நகரை சேர்ந்த சகோதரர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.
தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH. ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், ஆகியோர் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ், மற்றும் ஹக்கீம், அபு, சுவனம் அபு, ஆகியோர் உடனிருந்தனர்..
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
27/07/2020