சமூகசேவையை வாழ்க்கையாக்கி கொண்டவர் S M செய்யது இக்பால்... மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் பதிவு INTJ அமைப்பின் மாநிலச் செயலாளரும், மக்கள் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியருமான சகோதரர் S.M.செய்யது இக்பால் அவர்கள் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை தருகிறது.(இன்னா லில்லாஹி...) கடந்த காலத்தில் ஒரே முகாமில் நாங்கள் பணியாற்றியவர்கள் என்பதால் வருத்தம் அதிகமாக வாட்டுகிறது. அவர் சிறந்த வாசிப்பாளர் என்பதும், அரசியல் தெளிவுள்ளவர் என்பதும், களப்பணிகளில் ஈடுபாடுள்ளவர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. சென்னை மாநகரில் அவர் முன் முயற்சியில் நடைப்பெற்ற ரத்ததான முகாம்களும், மருத்துவ சேவை முகாம்களும் எண்ணற்றவையாகும். கடந்த 2020 ஆண்டு புத்தாண்டு நள்ளிரவில் சைதாப்பேட்டையில் கவர்னர் மாளிகையை நோக்கி குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சமூக நீதியாளர்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த குளிரில் எனதருகில் அமர்ந்து அவர் போராடியது நினைவுக்கு வருகிறது. சிரித்த முகத்தோடு அனைவரையும் சந்திப்பது அவரது இயல்பாகும். வருமானம் தரும் வேலையை இழந்து விட்டு, சமூக சேவையையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர் என்பது அவரது சிறப்பை எடுத்துக் கூறும். பத்திரிக்கையாளர், சமூக ஆளுமை என்ற ஆற்றல்
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மதுரை மாவட்ட துணைச் செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) S.சதாம் உசேன் த/பெ; சர்தார் 15.நடுத்தெரு கோரிப்பாளையம் மதுரை அலைபேசி; 96592 10786 2.) A.கோடைஅப்துல் மஜீத் த /பெ; அப்துல் சலாம் ஜவஹர்புரம் டி.ஆர்.ஓ. காலனி, மதுரை.625007 அலைபேசி; 98427 87538 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 11-07-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! – தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, M.புதூர் கனி த/பெ; முகம்மது சாலி ராமவர்மா நகர் கோ.புதூர், மதுரை அலைபேசி; 9597952219 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11-07-2020
சிபிஎஸ்சி பாடத்திட்ட குறைப்பில் மதச்சார்பின்மை பாடத்தை மத்திய அரசு நீக்குவதற்கு மாணவர் இந்தியா கண்டனம்
(மாணவர் இந்தியா தலைவர் ஜாவித் ஜாஃபர் வெளியிடும் அறிக்கை) சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அங்கங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவங்களை சிதைக்கும் நோக்கில் அதன் அடிப்படை அறிவு கூட வளர்ந்து வரும் தலைமுறைக்கு போய் சேர்ந்து விட கூடாது என்கிற சதி திட்டத்தின் முதற்கட்டமாகத்தான் இதை எடுத்துக் கொள்ள முடியும். ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி குறித்த பாடங்கள் மிக முக்கியமான அம்சமாக அமைய வேண்டும். மாணவர்கள் தங்களது நாட்டில் எத்தகைய ஆட்சி அமைப்புகள் இருக்கிறது என்பது தெரிந்து கொள்வது அவசியம். நீக்கம் செய்யப்போவதாக இருக்கிற பாடங்கள் அனைத்தும் ஜனநாயகம் சம்பந்தமாக உள்ளது என்பது இந்த மத்திய அரசின் பாசிச சிந்தனை போற்றும் நடவடிக்கையாக தான் அமைகிறது. இந்த யோசனை பரிந்துரை செய்யும் வாரியத்தை கேள்வி கேட்கக்கூடாது என்கிற வகையில் பதிலளிக்கும் மத்திய கல்வி அமைச்சகத்தின் செயல் மாணவர் சமூகத்தின் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கான ஒரு
நாவலருக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
திராவிட இயக்க முன்னோடி தலைவர்களில் ஒருவரும், நீண்ட காலம் தமிழக அமைச்சராக பணியாற்றியவருமான ஐயா. நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவரை தமிழக மக்கள் போற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் எனது நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள திருக்கண்ணபுரத்தில் 11.07.1920 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தன் இளமையில் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். திருப்பூரில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தந்தை பெரியாரை கவர்ந்தது. அதுவே பொது வாழ்வில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் மீது கொண்ட பற்றால் பெற்றோர் சூட்டிய நாராயணசாமி என்ற தன் பெயரை நெடுஞ்செழியன் என மாற்றிக்கொண்டார். தனது சிறப்பான சொற்பொழிவுகளால் நாவலர் என அனைவராலும் கொண்டாடப்பட்டார். "தம்பி வா... தலைமையேற்க வா..." என அண்ணாவால் நம்பிக்கை பொங்க அழைக்கப்பட்டவர் என்பது அவரது கூடுதல் சிறப்பாகும். பேரறிஞர் அண்ணா, டாக்டர் MGR, டாக்டர் கலைஞர், டாக்டர் அம்மா என நான்கு முன்னாள் முதல்வர்களோடு நெருக்கமாக பயணித்த சிறப்புக்குரியவர் என்பதும், பெருந்தலைவர் காமராஜர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற ஆளுமைகளாளும் மதிக்கப்பட்டவர் என்பதும் அவரது வரலாற்றை அலங்கரிக்கிறது. அவரது சிறப்பை போற்றும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பிறந்த திருக்கண்ணபுரத்தில்