சிபிஎஸ்சி பாடத்திட்ட குறைப்பில் மதச்சார்பின்மை பாடத்தை மத்திய அரசு நீக்குவதற்கு மாணவர் இந்தியா கண்டனம்

(மாணவர் இந்தியா தலைவர் ஜாவித் ஜாஃபர் வெளியிடும் அறிக்கை)

சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அங்கங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவங்களை சிதைக்கும் நோக்கில் அதன் அடிப்படை அறிவு கூட வளர்ந்து வரும் தலைமுறைக்கு போய் சேர்ந்து விட கூடாது என்கிற சதி திட்டத்தின் முதற்கட்டமாகத்தான் இதை எடுத்துக் கொள்ள முடியும். ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி குறித்த பாடங்கள் மிக முக்கியமான அம்சமாக அமைய வேண்டும். மாணவர்கள் தங்களது நாட்டில் எத்தகைய ஆட்சி அமைப்புகள் இருக்கிறது என்பது தெரிந்து கொள்வது அவசியம்.

நீக்கம் செய்யப்போவதாக இருக்கிற பாடங்கள் அனைத்தும் ஜனநாயகம் சம்பந்தமாக உள்ளது என்பது இந்த மத்திய அரசின் பாசிச சிந்தனை போற்றும் நடவடிக்கையாக தான் அமைகிறது.
இந்த யோசனை பரிந்துரை செய்யும் வாரியத்தை கேள்வி கேட்கக்கூடாது என்கிற வகையில் பதிலளிக்கும் மத்திய கல்வி அமைச்சகத்தின் செயல் மாணவர் சமூகத்தின் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கான ஒரு உதாரணம்.

கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் போன்றோரை உள்ளடக்கிய ஒரு தளத்தை ஏற்படுத்தி ஒரு கலந்துரையாடல் நடத்துவது போன்ற எந்த அடிப்படை ஜனநாயகமும் அளிக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தியாவின் கல்வி அமைப்புகளை முற்றிலுமாக அழித்துக் கொள்வதுதான் இந்த அரசின் நோக்கம் அதன் தொடர் முயற்சிகளில் ஒன்றாக இந்த பாடங்களை நீக்கம் செய்வது என்று மாணவர் இந்தியா கருதுகிறது. இது போன்ற பாசிச செயல்களுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவன்,
ஜாவித் ஜாஃபர் MBA, PGPM
மாநில தலைவர்
மாணவர் இந்தியா