
சமூகசேவையை வாழ்க்கையாக்கி கொண்டவர் S M செய்யது இக்பால்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் பதிவு
INTJ அமைப்பின் மாநிலச் செயலாளரும், மக்கள் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியருமான சகோதரர் S.M.செய்யது இக்பால் அவர்கள் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை தருகிறது.(இன்னா லில்லாஹி…)
கடந்த காலத்தில் ஒரே முகாமில் நாங்கள் பணியாற்றியவர்கள் என்பதால் வருத்தம் அதிகமாக வாட்டுகிறது.
அவர் சிறந்த வாசிப்பாளர் என்பதும், அரசியல் தெளிவுள்ளவர் என்பதும், களப்பணிகளில் ஈடுபாடுள்ளவர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
சென்னை மாநகரில் அவர் முன் முயற்சியில் நடைப்பெற்ற ரத்ததான முகாம்களும், மருத்துவ சேவை முகாம்களும் எண்ணற்றவையாகும்.
கடந்த 2020 ஆண்டு புத்தாண்டு நள்ளிரவில் சைதாப்பேட்டையில் கவர்னர் மாளிகையை நோக்கி குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சமூக நீதியாளர்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த குளிரில் எனதருகில் அமர்ந்து அவர் போராடியது நினைவுக்கு வருகிறது.
சிரித்த முகத்தோடு அனைவரையும் சந்திப்பது அவரது இயல்பாகும். வருமானம் தரும் வேலையை இழந்து விட்டு, சமூக சேவையையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர் என்பது அவரது சிறப்பை எடுத்துக் கூறும்.
பத்திரிக்கையாளர், சமூக ஆளுமை என்ற ஆற்றல் மிகு பொதுநலவாதி இன்று நம்மிடமிருந்து விடைப்பெற்றிருக்கிறார்.
INTJ ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது.
மஜக ஒரு நல்ல நண்பரை பறிகொடுத்துள்ளது.
அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறோம்.
அவர் அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளையும், பாவங்களையும் இறைவன் மன்னிப்பானாக என்று அவரது மறு உலக வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
11.07.2020