மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள், இளைஞரணி மாவட்டச் செயலாளராக, S.சையத் ஜியாவுதின் த/பெ; சையத் சிராஜூதீன் 1/1 குப்பு முத்து தெரு, எல்லிஸ் ரோடு, அண்ணா சாலை, சென்னை-600002. அலைபேசி : 8667811592 தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச் செயலாளராக, J.அர்ஷத் ரஹ்மான் த\பெ; K.ஜெய்னுல்லாபுதீன் 29, சாய் நகர் முதல் தெரு, சின்மய நகர், சென்னை 600092. அலைபேசி : 9976850593 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 19-06-2020
Month:
சிகிச்சைக்காக சென்னை சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைப்பு!! பரிசோதனைகளை முடித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மஜக வினர்!!
ஜுன்.18., நாகை மாவட்டம் திருப்பூன்டியை சேர்ந்த வயதான இரண்டு பெண்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை சென்று விட்டு கடந்த 15 ஆம் தேதி ஊருக்கு திரும்பும் வழியில் கடலூரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அரசு விதிகளின்படி நாகப்பட்டினத்தில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள். மூன்று நாட்களாக பரிசோதனை முடிவு வராததால் இன்று (18-06-2020) காலை நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து உதவுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர், உடனடியாக நாகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. வட்டாட்சியர் தரப்பிலிருந்து கடலூரிலிருந்து பரிசோதனை முடிவுகள் வந்தால் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், அவர்களை தொடர்பு கொண்டு பரிசோதனை முடிவுகளை உடனே பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரை மஜக-வினர் தொடர்பு கொண்டு, அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் உடனடியாக பெற்று நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்ததால், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக்,
கொல்கத்தாவை சோ்ந்த ஆதரவற்ற பெண்மனியின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்..!
செங்கை.ஜூன்.18., கொல்கத்தாவை சேர்ந்த கோலாபி காத்துன் பீவி (20) என்ற ஆதரவற்ற இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் ஜிந்தா மதார் அவர்களை காவல் துறையினர் தொடர்பு கொண்டு, இறந்த அந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய கேட்டு கொண்டனர். அதன் அடிப்படையில் குரோம்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் நினைவு ஜும்மா மஸ்ஜித் நிர்வாகமும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து உடலை நல் அடக்கம் செய்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கல்பட்டுவடக்குமாவட்டம் 18-06-2020
தனிமைப்படுத்தும் முகாமில் மலேசியாவில் இருந்து வந்தவர் மரணம் ! தமிழக அரசு 25லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.!! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை..!
கடந்த 12-ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னைக்கு வருகை தந்த முஹம்மது ஷரிப் (61) என்பவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அரசின் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இத்தகவலை மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தார். இச்செய்தி எனக்கு கிடைக்கப் பெற்றதும் உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஜெயக்குமார் அவர்களை தொடர்புகொண்டு ஆம்புலென்ஸ்சை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்ப கேட்டுக்கொண்டேன். அமைச்சர் அவர்களும் உடனடியாக ராதாகிருஷ்ணன் IAS அவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக ஆம்புலென்ஸ் செல்ல உத்தரவிட்டார். ஆம்புலென்ஸ் செல்வதற்கு முன்பாகவே அவர் இறந்து போனது துரதிர்ஷ்டவசமானது. இத் தகவல் அறிந்ததும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் அந்த இடத்திற்கு சென்று, பதட்டத்தில் இருந்தவர்களை அமைதிப்படுத்தினர். வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வந்து அரசின் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கி இருந்து, விரைவில் தனது குடும்பத்தை சந்திப்போம் என்று நம்பிக்கையோடு இருந்த அவரது மரணம், அந்த முகாமில் தங்கி இருக்கக்கூடிய பலரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஆம்புலென்ஸ் வருகையில் தாமதம், மருத்துவர்கள் இல்லாததுமே இந்த மரணம் ஏற்பட காரணம் என அங்கு தங்கியிருப்பவர்கள்
கூத்தாநல்லூர் முகம்மது ஷெரீப் மரணம்.! நேரடி களத்தில் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது.!!
செங்கை.ஜூன்.15., உலகை உலுக்கும் கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சென்னைக்கு வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 12.6.2020 அன்று மலேசியாவில் இருந்து வந்திருந்த மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச்செயலாளர் முஜிபுர் ரகுமான் பாக்கவி அவர்களும் இந்த முகாமில் தங்கியுள்ளனர். மலேசியாவிலிருந்து வந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது ஷெரீப் என்பவருக்கு கடந்த 13.6.2020 அன்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை அளிக்க அதிகாரிகள் முன்வராத சூழலில் நேற்று (14.6.2020) காலை மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, மீண்டும் அதிகாரிகளிடம் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று (14.6.2020) மாலை சுமார் 7.30 மணியளவில் முகமது ஷெரீப் அவர்கள் ரத்த வாந்தி எடுக்க, உடனடியாக அருகிலிருந்த திருநெல்வேலி ஏர்வாடியைச் சேர்ந்த மீரான் மைதீன் அவர்கள் மற்றொரு அறையிலிருந்த மஜக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்