சிகிச்சைக்காக சென்னை சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைப்பு!! பரிசோதனைகளை முடித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மஜக வினர்!!

ஜுன்.18.,

நாகை மாவட்டம் திருப்பூன்டியை சேர்ந்த வயதான இரண்டு பெண்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை சென்று விட்டு கடந்த 15 ஆம் தேதி ஊருக்கு திரும்பும் வழியில் கடலூரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அரசு விதிகளின்படி நாகப்பட்டினத்தில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள்.

மூன்று நாட்களாக பரிசோதனை முடிவு வராததால் இன்று (18-06-2020) காலை நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து உதவுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர், உடனடியாக நாகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

வட்டாட்சியர் தரப்பிலிருந்து கடலூரிலிருந்து பரிசோதனை முடிவுகள் வந்தால் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், அவர்களை தொடர்பு கொண்டு பரிசோதனை முடிவுகளை உடனே பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரை மஜக-வினர் தொடர்பு கொண்டு, அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் உடனடியாக பெற்று நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்ததால், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மற்றும் MLA அலுவலக செயலாளர் சம்பத், ஆகியோர் சிகிச்சை முடித்து வந்த வயதானவர்களுக்கு வாகன ஏற்பாடு செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
18.06.2020