கொல்கத்தாவை சோ்ந்த ஆதரவற்ற பெண்மனியின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்..!


செங்கை.ஜூன்.18.,

கொல்கத்தாவை சேர்ந்த கோலாபி காத்துன் பீவி (20) என்ற ஆதரவற்ற இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் ஜிந்தா மதார் அவர்களை காவல் துறையினர் தொடர்பு கொண்டு, இறந்த அந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய கேட்டு கொண்டனர்.

அதன் அடிப்படையில் குரோம்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் நினைவு ஜும்மா மஸ்ஜித் நிர்வாகமும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து உடலை நல் அடக்கம் செய்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கல்பட்டுவடக்குமாவட்டம்
18-06-2020