மரணித்தராணுவவீரர்பழனிஅவர்களின்குடும்பத்தினரைசந்தித்துஆறுதல்கூறிய மரணித்த ராணுவ வீரர் பழனி அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மஜக துணை பொதுச்செயலாளர்.!

ஜூன்.18.,

இந்திய எல்லை பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர், இதில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் வீர மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கடுங்கலூர் கிராமத்தை சேர்ந்த வீர மரணமடைந்த பழனியின் இல்லத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னூல் ஆபிதின் அவர்கள் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பழனி அவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை பொதுச்செயலாளருடன் மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராஹிம், பரமக்குடி நகர் செயலாளர் எமனை சாகுல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கனிபா, பரமக்குடி நகர இளைஞரணி செயலாளர் நைனா முஹம்மது, எமனேஸ்வரம் கிளை பொருளாளர் தக்கு புக்கு ஜியா, எமனேஸ்வரம் இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் சதகி, தொண்டி நகரச் செயலாளர் சேக் மற்றும் உறுப்பினர்கள் தொண்டர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அண
#MJKITWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
17-06-2020