கோவை:ஜுன்.17.,
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் உதவி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 14.06.2020 அன்று சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த நாகையை சேர்ந்தவர்களை மஜக-வினர் வரவேற்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து அரசு விதிகளின்படி அவர்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை கோவை மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களுடைய பரிசோதனை சான்றிதழில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்ததின் அடிப்படையில் அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், பேசி அனுமதி பெற்று அவர்களை சொந்த ஊருக்கு மஜக-வினர் அனுப்பி வைத்தனர்.
இப்பணிகளை IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர் அபு, விவசாய அணி மாவட்டச் செயலாளர் அன்வர், இளைஞரணி துணைச் செயலாளர் சதாம், சிராஜ், உள்ளிட்டோர் சிறப்பாக செய்தனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
16.06.2020