ஜுன் 17,
தாயகம் திரும்பும் தமிழர்களின் கோரிக்கைகளையும், தாயகம் திரும்பி கேளம்பாக்கம் முகாமில் தங்கி, சிகிச்சை ஆய்வில் நெகட்டிவ் ஆனவர்களை வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்தக்கோரியும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் தன் வீட்டு வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இக்கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்தனர்
மதியம் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அவரிடம், கேளம்பாக்கம் முகாமுக்கு சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பி வைப்பதாகவும், விரைந்து அனுப்புவது குறித்து அதிகாரிகளிடம் பேசுவதாகவும் கூறினார்.
அடுத்தடுத்து இறந்த இருவரின் குடும்பத்திற்கும் நிவாரண உதவி கிடைக்க பரிந்துரைப்பதாகவும் கூறினார்.
மேலும் தாயகம் திரும்புபவர்கள் ஆய்வுக்கு பின்பு நெகட்டிவ் ரிசல்ட் பெற்றால், 3 நாட்களில் வீடுகளுக்கு அனுப்புவது குறித்து மருத்துவ நிபுணர் குழு தான் முடிவு செய்யும் என்பதால், அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பிரச்சனை இது என்றும் விளக்கினார்.
இதை ஏற்று தனது 7 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை மாலை 5:15 மணிக்கு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நிறைவு செய்வதாக அறிவித்தார்.
பிறகு கூடுதல் விமான சேவை, சார்ட்டர்ட் விமானங்கள் வருகை ஆகியவை குறித்தும் சிறப்பு அதிகாரி தினேஷ் ஆலிவர் IAS அவர்களிடம் பேசி , தாயகம் திரும்ப தவிக்கும் வெளிநாட்டு தமிழர்களின் கோரிக்கைகளையும் விளக்கினார்.
வேலையிழந்து தாயகம் திரும்புபவர்களிடம், கொரோனா கிசிச்சை ஆய்வுக்கு கூடுதலான கட்டணம் கேட்பது தொடர்பாகவும் எழும் அதிருப்திகளையும் கூறினார்.
இக்கோரிக்கைகளை அரசு உறுதியாக கவனமெடுக்கும் என நம்புவதாகவும் , தேவையெனில் இதற்காக ஜனநாயக சக்திகளை இணைத்து போராட்ட வடிவங்களை கையிலெடுப்போம் என்றும் கூறினார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
17.06.2020