ஜூன்.29, அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சேதுரோடு பிஸ்மி மெடிக்கல் அருகில் நகர துணைச் செயலாளர் மர்ஜூக் அவர்கள் தலைமையில் 'கபசுர குடிநீர்' வழங்கப்பட்டது. நேற்றை தொடர்ந்து இன்றும் நகரின் பிற பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட கபசுர குடிநீரை வணிகர்கள், ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்கள் என சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் அருந்தி பயனடைந்தனர். இந்நிகழ்வில், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் அஷ்ரப், இளைஞரணி செயலாளர் ஜபருல் ஹக், அஹமது அஸ்கர், நபில் ஆகியோர் கலந்துக் கொண்டு விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #அதிரை_நகரம். #தஞ்சைதெற்குமாவட்டம்.
Month:
தூத்துக்குடி இரட்டை படுகொலைக்கு நீதி கோரி..! நீலகிரி மேற்கு மாவட்ட மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!!
நீலகிரி:ஜூன்.29., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஆகியோருக்கு நீதிகேட்டு நீலகிரி மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் S.தமீமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில், நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், ரபீக், மற்றும் நிர்வாகிகள் சம்ரின், நியாஸ், ஜீவா, ஹரி, சந்திரன், சமீர் காக்கா, அப்துல் ரகுமான், ஷம்சீர். ரியாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காவல்துறை நடத்திய படுகொலையை கண்டித்து பதாகை ஏந்தி கோஷமிட்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரிமேற்குமாவட்டம் 28-06-2020
கன்னியாகுமரியில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!
ஜூன்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு கன்னியாகுமரியில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். காணொளி காட்சி மூலம் இணைந்த மாநில துணைச்செயலாளர் A.R.ஷாகுல் ஹமீது அவர்கள் புதிதாக இணைந்த இளைஞர்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார், பின்னர் பேசிய நெல்லை மாவட்டச்செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் கட்சியின் புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல நல்ல ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் முஜிபு ரஹ்மான், மாவட்ட இளைஞரணி செயலாளர் நவாஸ் அன்வர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகரச் செயலாளர் அமீர்கான், பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் அஷ்ரப் அலி, மற்றும் மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷெரிப் ஆகியோர் கலந்து கொண்டார்கள். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 27-06-2020
கத்தார் ஓமானிலிருந்து கூடுதல் விமான சேவை வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
ஜூன்.27., மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கும் வந்தே பாரத் திட்டத்திலான விமான சேவையில் கத்தாரிலிருந்து ஒரு விமான சேவை கூட தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. இது குறித்து இதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரியான திருவாட்டி. மைதிலி IAS அவர்களை தொடர்பு கொண்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார். கத்தாரில் தவிக்கும் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பது வருத்தமளிப்பதாக கூறிய அவர், அங்கிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப வசதியாக, கூடுதல் விமான சேவைகளை மத்திய அரசிடம் கேட்டு பெறுமாறு கோரிக்கை வைத்தார். அது போல் ஒமான் நாட்டில் தவிக்கும் தமிழர்களும் தாங்கள் தாயகம் திரும்ப கூடுதல் விமான சேவைகளை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், அதற்கும் உரிய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் தாங்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விரைவாக தாயகம் திரும்ப துடிப்பதையும் எடுத்துக் கூறினார். இது குறித்து உரிய முயற்சிகளை மேற்கொள்வதாக திருவாட்டி. மைதிலி IAS அவர்கள் கூறியுள்ளார். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் தொடர்ந்து மஜக-விடம் இது குறித்த தகவல்களையும், வேண்டுகோள் களையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 27-06-2020
மலேசியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்…! சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது கோரிக்கை…!!
சிவகங்கை.ஜூன்.26., மலேசியாவில் ஊரடங்கு காலத்தில் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று சந்தித்து கோரிக்கை வைத்தார். அவர் அளித்த மனுவில் கூறியதாவது... மலேசியா நாட்டில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து சென்ற சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை இந்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் 1-ம் தேதி மலேசிய குடியுரிமை அதிகாரிகள் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் சோதனை நடத்தி தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களை தகுந்த காரணமின்றி பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 25 நபர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மலேசிய குடியுரிமை அதிகாரிகளால் பிடித்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீது மனித உரிமை மீறப்படுகிறது என்ற செய்தி சமீபத்தில் முகாமில் இருந்து வெளியே வந்தவர்களால் சொல்லப்படுகிறது. எனவே, தாங்கள் இது