சிவகங்கை.ஜூன்.26.,
மலேசியாவில் ஊரடங்கு காலத்தில் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அவர் அளித்த மனுவில் கூறியதாவது…
மலேசியா நாட்டில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து சென்ற சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை இந்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் 1-ம் தேதி மலேசிய குடியுரிமை அதிகாரிகள் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் சோதனை நடத்தி தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களை தகுந்த காரணமின்றி பிடித்துச் சென்றுள்ளனர்.
அவர்களில் சுமார் 25 நபர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மலேசிய குடியுரிமை அதிகாரிகளால் பிடித்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீது மனித உரிமை மீறப்படுகிறது என்ற செய்தி சமீபத்தில் முகாமில் இருந்து வெளியே வந்தவர்களால் சொல்லப்படுகிறது.
எனவே, தாங்கள் இது விஷயத்தில் தனி கவனம் செலுத்தி அவர்களையெல்லாம் மீட்டு குடும்பத்தாரிடம் சேர்க்க சிறப்பு முயற்சி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு தனி விமானம் மூலம் அழைத்து வர முயற்சி செய்தால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மஜக சார்பில் செய்து தருகிறோம் என்றும் ஆட்சியரிடம் மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் கூறினார்கள்.
(மலேசியாவில் சிக்கியுள்ள ஏனைய அனைத்து தமிழர்களையும் மீட்க சென்னையில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகளை மஜக சார்பாக விரைவில் சந்தித்து பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது)
மஜக பொருளாளருடன் MJVS மாநிலச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், சிவகங்கை நகரச் செயலாளர் சேக், அல்லாபிச்சை, யாஸின், துறைமுகம் சிக்கந்தர், குப்பை சீனி முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
25-06-2020