கொரோனா நோய் தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும் நடந்துவரும் வேளையில், அந்த நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க அந்த நோய்க்கு கேடயமாக ஹோமியோபதி மருத்துவத்தில் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவதற்காக 200 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இம்மருந்தை கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக எடுத்து கொள்ள தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையும் அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய / மாநில அரசுகள் அங்கீகரித்துள்ள இம்மருந்தை நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏனங்குடியில் முதற்கட்டமாக இருநூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு மஜக வினர் இலவசமாக வழங்கியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விநியோகம் செய்ய உள்ளனர்.
மஜக ஏனங்குடி கிளை செயலாளர் சலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் அசார், பாலா, சம்சு, மாலிக், அப்சல் உள்ளிட்டோர் சிறுக்குழுக்களாக பிரிந்து சென்று விநியோகம் செய்தனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.