தூத்துக்குடி; ஜூன்.26.,
காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மஜக சார்பு வணிகர் சங்கமான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பில் கண்டன பதாகை பரப்புரையும் நடைப்பெற்றது.
இன்று அவர்களது வீட்டிற்கு மஜக மாநில துணைச் செயலாளர் காயல் A.R.சாகுல் ஹமீது தலைமையில் மஜக-வினர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அப்போது அவரது மருமகன் பொன்.சேகரிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாஹிப், மஜக தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது நஜீப், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், திருச்செந்தூர் ஒன்றிய மஜக செயலாளர் மீரா சாஹிப் மற்றும் மாஷா அல்லாஹ் செய்யது ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
26-06-2020