2019-2020 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மும்பையை சேர்ந்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மும்பை தமிழர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு அதே நிலைபாட்டை மும்பை தமிழ் மாணவர்களுக்கும் எடுக்க வேண்டும் என்றும் இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள் என்றும் கேட்டு கொண்டார்கள். அதனடிப்படையில் அவர் பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார். அதன் பிறகும் இரண்டாவது முறையாக தொடர்புக் கொண்டும் நினைவூட்டினார். அதன்படி இன்று மும்பையை சேர்ந்த 69 தமிழ் மாணவர்களும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக இன்று மாலை 5 மணியளவில் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்பு கொண்ட மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், துரிதமாக முயற்சி எடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகக் கூறினார். மஜகவின் இம்முயற்சிக்கு மும்பை வாழ் தமிழர்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம்.
Month:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அங்கீகரித்த ஹோமியோபதி மருந்து! நாகூரில் முதற்கட்டமாக முந்நூறு குடும்பங்களுக்கு வழங்கிய மஜக!
ஜூன்.29, கொரோனா நோய் தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும் நடந்துவரும் வேளையில், அந்த நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க அந்த நோய்க்கு கேடயமாக ஹோமியோபதி மருத்துவத்தில் 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவதற்காக 200 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இம்மருந்தை கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக எடுத்து கொள்ள தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையும் அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய / மாநில அரசுகள் அங்கீகரித்துள்ள இம்மருந்தை நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகூரில் முதற்கட்டமாக சுமார் 300 குடும்பங்களுக்கு மஜக வினர் இலவசமாக வழங்கியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விநியோகம் செய்ய உள்ளனர். இதில் மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் தெத்தி ஆரிப், நாகூர் நகர பொருளாளர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர்கள் அரபாத், சவுக்கத் அலி, வார்டு செயலாளர்கள் சதாம் உசேன், சுல்தான் மற்றும் கலிமுல்லாஹ், சம்சுதீன் உள்ளிட்டோர் சிறுக்குழுக்களாக பிரிந்து வீடுவீடாக சென்று விநியோகம் செய்தனர். கடந்த சில நாட்களாக 'ஆர்சனிக் ஆல்பம் 30' ஏனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தகவல்
இவ்வாண்டு குலுக்கலில் தேர்வானவர்களை அடுத்தாண்டு ஹஜ் பயணத்திற்கு அனுப்ப வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!
கொரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் புனித ஹஜ் பயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக ஹஜ் கமிட்டியின் சார்பில் குலுக்கலில் தேர்வானவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக ஹஜ் கமிட்டி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், இவ்வாண்டு (2020) புனித ஹஜ் பயணம் செய்ய தேர்வானவர்கள், அடுத்தாண்டு குலுக்கலின்றி ஹஜ் பயணம் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 29-06-2020
திருச்சியில் மஜக சார்பில் முககவசங்களை வழங்கி அறிவுறுத்தல்!
ஜூன்.29, திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மத்திய பேருந்து நிலையம், நத்தர்ஷா தர்கா, NSB ரோடு, பால்பண்ணை உள்ளிட்டப் பகுதிகளில் முக கவசமின்றி வெளியே வரும் பொதுமக்களிடம் மஜக சார்பில் மாஸ்க் வழங்கி கொரோனா நோயின் தீவிரம் குறித்தும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்து கூறி அறிவுறுத்தினர். இந்நிகழ்வு மஜக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் வரகனேரி அபு தலைமையில் நடைப்பெற மாவட்ட செயலாளர் பாபு பாய் முககவசங்களைப் பொதுமக்களுக்கு வழங்கி இவ்விழிப்புணர்வு இப்பரப்புரையை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் சேக் தாவூத், மாவட்ட துணை செயலாளர்கள் தர்கா பாரூக், பஜார் பக்ருதீன், ஜமால் தீன், ஆழ்வார்தோப்பு காதர், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாணவர் இந்தியா செயலாளர் ஷாருக்கான், MJTS செயலாளர் அரியமங்கலம் காதர், MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்பாஸ் மற்றும் மஜக செயல்வீரர்களும் சிறு சிறு குழுவாக பிரிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர். இப்பணிகளுக்கு மத்தியில் கலையரங்கம் அருகே வலிப்பு நோய் ஏற்பட்டு ஒருவர் போராடிய நிலையில் மஜக நிர்வாகிகள் அவருக்கு
காவல்துறையால் தாக்கப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு நஷ்டஈடு வழங்குக ! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஹபீப் முஹம்மது ( 31 ) என்பவர் கடந்த ஜூன் 9 அன்று முககவசம் அணியாமல் வந்ததாகவும், அப்போது காவலர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஹபீப் முஹம்மது அவர்கள் ஆறுமுகநேரி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் இரண்டு சிறுநீரகமும் மிகவும் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தற்போது டயாலிஸஸ் கிசிச்சை பெற்று வருகிறார். அவர் மரணத்தை எதிர்நோக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர் குற்றம் செய்திருப்பின் வழக்குப்பதிவு செய்வது தான் காவல் துறையின் கடமையாகும். அவர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தும் உரிமையை காவல்துறைக்கு சட்டம் வழங்கிடவில்லை. எனவே சட்டத்துக்கு புறம்பாக இவர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய காவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, பணி இடை நீக்கம் செய்வதோடு, மருத்துவ மனையில் கிசிச்சை பெற்று வரும் அவரது முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் பல இடங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் செய்திகள்