கன்னியாகுமரியில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!


ஜூன்.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு கன்னியாகுமரியில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்.

காணொளி காட்சி மூலம் இணைந்த மாநில துணைச்செயலாளர் A.R.ஷாகுல் ஹமீது அவர்கள் புதிதாக இணைந்த இளைஞர்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார், பின்னர் பேசிய நெல்லை மாவட்டச்செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் கட்சியின் புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல நல்ல ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் முஜிபு ரஹ்மான், மாவட்ட இளைஞரணி செயலாளர் நவாஸ் அன்வர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகரச் செயலாளர் அமீர்கான், பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் அஷ்ரப் அலி, மற்றும் மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷெரிப் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
27-06-2020