ஜூன்.27.,
மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கும் வந்தே பாரத் திட்டத்திலான விமான சேவையில் கத்தாரிலிருந்து ஒரு விமான சேவை கூட தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.
இது குறித்து இதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரியான திருவாட்டி. மைதிலி IAS அவர்களை தொடர்பு கொண்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார்.
கத்தாரில் தவிக்கும் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பது வருத்தமளிப்பதாக கூறிய அவர், அங்கிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப வசதியாக, கூடுதல் விமான சேவைகளை மத்திய அரசிடம் கேட்டு பெறுமாறு கோரிக்கை வைத்தார்.
அது போல் ஒமான் நாட்டில் தவிக்கும் தமிழர்களும் தாங்கள் தாயகம் திரும்ப கூடுதல் விமான சேவைகளை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், அதற்கும் உரிய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் தாங்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விரைவாக தாயகம் திரும்ப துடிப்பதையும் எடுத்துக் கூறினார்.
இது குறித்து உரிய முயற்சிகளை மேற்கொள்வதாக திருவாட்டி. மைதிலி IAS அவர்கள் கூறியுள்ளார்.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் தொடர்ந்து மஜக-விடம் இது குறித்த தகவல்களையும், வேண்டுகோள் களையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
27-06-2020