ஏப்ரல் 10, நாகை ஒன்றியத்தில், தேமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். கொரணா தொடர்பான முன் எச்சரிக்கை பணிகள் குறித்து டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அவர்களின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2384215638344864&id=700424783390633
Month:
நாகை அம்மா உணவகத்தில், முதமிமுன்அன்சாரி MLA ஆய்வு!
ஏப்ரல் 09, இன்று நாகையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி ஆணையர் ஏகராஜ் அவர்களும் உடன் வந்தார். அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை சாப்பிட்டு பார்த்தார். பிறகு சமையலறை பகுதியின் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பிறகு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கும் சென்று அங்கு சமைக்கப்பட்ட தயிர் சாதம் , சாம்பார், சோறு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். இது தவிர தினமும் நகராட்சி சார்பில் யாசகர்கள், வறியவர்கள், தேவையுடையவர்கள் என 380 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்படுவது குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தார். நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்தும் கமிஷனர் அவர்கள் MLA விடம் விளக்கினார். வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களும் வினியோகிக்கப்படுவது குறித்தும் MLA அவர்கள் விசாரித்தறிந்தார். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2382536338512794&id=700424783390633
நாகைதொகுதி பொரவச்சேரியில் நடமாடும் ரேஷன்கடை : முதமிமுன்அன்சாரிMLAநேரில்_ஆய்வு!
ஏப்.09, இன்று நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நாகை ஒன்றியத்தில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். புத்தூர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவச்சேரி, தேமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். பொரவச்சேரியில் நடமாடும் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி செயல் அலுவலர் சாக்ரடிஸ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு ரேஷன் கடையில் ஒருவர் பின் ஒருவராக மைக் மூலம் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, வரிசையாக வந்து பொருட்களை மக்கள் பெற்று சென்றனர். பிறகு பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு சென்றவர். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பரிசோதனை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அங்கு குடிநீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் விநியோகம் குறித்தும் ஊர் பெரியவர்களிடம் விசாரித்தார். பிறகு அதிகாரிகளிடம் அது பற்றி கூறி, உரிய கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அங்கு பணியில் இருந்த காவல் துறையினரை சந்தித்து அவர்களை பாராட்டினார். அங்கு வந்த மஜக ஒன்றிய செயலாளர் ஜலாலிடம், கடமையில் ஈடுபடும் காவலர்கள், சுகாதாரத் துறையினருக்கு மோர், இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2383198338446594&id=700424783390633
மஜக காயல்பட்டினம் நகரம் சார்பில் தொடர்ச்சியாக கபசுரக்குடிநீர் விநியோகம்
தூத்துக்குடி_ஏப்-9., மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீர் தொடர்ச்சியாக இன்று 4-வது நாளாக விநியோகம் செய்யப்பட்டது. காயல்பட்டிணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் வழிகாட்டுதலில் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இன்று மாலை பெரிய நெசவு தெரு மற்றும் சின்ன நெசவு தெரு பகுதிகளில் வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியை பேணி விதிமுறைகளை கடைபிடித்து விநியோகம் செய்யப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் A.R. சாகுல் ஹமீது தலைமையில் நெசவு ஜமாத் தலைவர் KKS காதர்மீரான் அவர்கள் கபசுரக் குடிநீர் விநியோகித்து துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், காயல்பட்டிணம் நகர நிர்வாகிகள் ஜிபுரி, மீரான், இப்னுமாஜா, இர்ஷாத், சித்தீக், ஷேக் முகமது மற்றும் மஜக-வினர் கலந்து கொன்டு கபசுரக் குடிநீர் விநியோகம் செய்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_மாவட்டம் 09-04-2020
மஜக சார்பில் கபசுரகுடிநீர் தயாரித்து விநியோகம்!
ஏப்.09, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மஞ்சக்கொல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் தொடர்ந்து இரண்டு நாட்களாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக்குடிநீரை ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களாக பிரிந்து வீடுவீடாக சென்று தேவைக்கேற்ப விநியோகம் செய்து வருகின்றனர். சமூக விலகலை கடைப்பிடித்து கூட்டம் சேராமல் விநியோகம் செய்யும் பணியினை நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் மேற்பார்வையில் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.