மலேசியா.மார்ச்.08., மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் இமாமாக பணிபுரியும் நாசீர் அலி உமரி அவர்கள் எழுதிய "வியர்வை உலரும் முன்" என்ற நூல் வெளியீட்டு விழா பள்ளியின் கீழ்தளத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு நூலாசிரியரை வாழ்த்தினார். இந்நூலில் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள வேண்டிய, மரணம் வருவதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அழகிய முறையில் எளிய நடையில் எடுத்துக் கூறியுள்ளார். இவ்விழாவில் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹம்மது இக்பால், மௌலவி கம்பம் பீர் முஹம்மது, தீன் ஜுவல்லர்ஸ் குழுமம் சிராஜுதீன் மற்றும் ரஃபியுதீன், செய்யது ரெஸ்டாரண்ட் உரிமையாளர் டத்தோ ஜமருல் கான், மெட்ரோ செக்யூரிட்டி உரிமையாளர் அப்துல் காதிர், டத்தோ டாக்டர் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மலேசியா_மண்டலம் 07-03-2020
Month:
வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில்..! மஜக அவைத்தலைவர் நாசர்உமரீ பங்கேற்பு..!!
சென்னை.மார்ச்.07., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 23 நாட்களாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். இன்று (07-03-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். உடன் மாவட்டச் செயலாளர் தாங்கள் தாரிக், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் கதிர் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமாவட்டம் 07-03-2020
பேராஅன்பழகன் உடலுக்கு மஜக அவைத் தலைவர் நாசர்உமரி நேரில் மரியாதை!
மார்ச் 07, இன்று காலமான திமுக பொதுச் செயலாளர் பேரா. க.அன்பழகன் அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அவைத் தலைவர் நாசர் உமரீ நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பிறகு திமுக தலைவர் தளபதி. திரு.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி நிகழ்ச்சி காரணமாக வர இயலவில்லை என்று கூறி, மஜக வின் சார்பில் ஆறுதலை தெரிவித்தார். அவருடன் மாநில துணை செயலாளர் புதுமடம். அனிஸ், இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடன் சென்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #சென்னை.
குடியுரிமை சட்டங்கள் தொடர்பான வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்! முதல்வரிடம் முதமிமுன்அன்சாரி MLA நேரில் வழங்கினார்!
மார்ச் 07, இன்று நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். விழா முடிந்ததும் மேடையில் அவரை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதன்மை தீர்மானங்களை நேரில் வழங்கினார். தமிழக மக்களின் மன நிலையை மதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MP, திரு.செல்வராஜ் உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் சாகுல் ஹமீது, முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
பேராசிரியர் அன்பழகன் மரணம், திராவிடஇயக்கத்தின் தீபம் அணைந்தது! முதமிமுன்அன்சாரி MLA இரங்கல்!
தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் மூத்தவராகவும், கலைஞரின் உற்ற நண்பராகவும், திராவிட இயக்க போராளியாகவும் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது தமிழ் உலகிற்கு ஒரு துயரச் செய்தியாகும். தஞ்சை சமவெளியாம் நாகை மாவட்டத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று, பெரியாரின் ஈரோட்டு பாசறையில் பொதுவாழ்வை தொடங்கியவர். திருவாரூரில் நடைப்பெற்ற மீலாது விழா மாநாட்டில் தான் பேராசிரியர் அன்பழகன் அவர்களும், கலைஞர் அவர்களும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த இனிய நட்பு அவர்களை உற்ற கொள்கை நண்பர்களாக மாற்றியது. 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச் செயலாளராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் அவரது சிறப்புகளை உணர்த்தினாலும், திராவிட இயக்க கொள்கைகளை அணையாமல் பாதுகாத்த மாவீரர் என்பதே அவரது பெருமையை பறைசாற்றும். எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை போராளியாக அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் ஏவுகணையாய் செயல்பட்ட அவரது தீரமும், தமிழர் வாழ்வுரிமைகளில் அவர் காட்டிய அக்கறையும், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளில் சமரசம் செய்யாத முனைப்பும் அவரை தமிழர்களின் இனமானப் பேராசிரியர் என போற்ற காரணங்களாய்