டிச.15, புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் மஜக சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு சார்பாக பண்ருட்டியில் இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்டச் செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் ஆகியோர் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தை துவக்கி வைத்தனர். பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையத்தை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாரு முன்னேறிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் கான், பண்ருட்டி யாசின், Apm சலீம், ரியாஸ் ரஹ்மான், கியாசுதீன் (தெ) உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஒன்றிய, நகர கிளைகளை சேர்ந்த மஜகவினர் திரளாக கலந்து கொண்டு கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம்.
Month:
புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திருத்தம் செய்யக்கோரி! கோவையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்
இந்திய மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கும் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும். இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும். கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது1955ல் இருந்து நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டத்தை பொருளாதார தோல்விகளை மறைப்பதற்காகவும் மதச்சாற்பற்ற அரசு என்று உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய இந்திய தேசத்தை காவி தேசம் என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம் இந்த சட்டத்திருத்தத்தில் நேபாளத்தில் பாதிப்புக்குள்ளான கிறிஸ்துவர்களையும், ஈழத்தமிழர்ளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மர், நாட்டின் இஸ்லாமியர்களையும் இன, மொழி, மதரீதியாக பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சட்டதிருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசினார். இதில் மாநில கொள்கை விளக்க அணி செயலளர் கோவை நாசர், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கோவை அப்துல்பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி
நாகையில் புதியகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகல் கிழிப்புபோராட்டம் – மஜகவினர்_கைது!
டிச.15, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பில் இன்று நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறை கெடுபிடிகளை மீறி குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஸி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, சேக் அகமதுல்லாஹ், சபுருதீன், மு.மாவட்ட நிர்வாகி திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், சுல்தான், கீழையூர் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, நகர செயலாளர்கள் அஜீஜுர் ரஹ்மான், அபுசாலி சாஹிப், திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இபுராஹீம், ஷேக்பரீத், திருப்பூண்டி இப்ராஹீம், அஜீஸ், ஜாசிம், பொருள்வை ஜலால், மஞ்சை சதாம், வவ்வாலடி அன்சாரி, தோப்புத்துறை முபீன், அல்தாப், நிசாத், நாகூர் சாகுல் ஹமீது, ஷேக்அலி, கலிமுல்லாஹ், அப்துல் காதர், செமிருதீன்,
புது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட மஜக போராட்டம்..!
புதுக்கோட்டை.டிசம்பர் 15.., மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையம் எதிரில் இன்று மாபெரும் கண்டன போராட்டம் மாவட்டச் செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து ஈழ தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும், நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களையும் புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் ஜமாத்தார்கள், CPI (ML) கட்சியின் தோழர்கள், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் நெடுவாசல் திருமுருகன் மற்றும் சகோதர சொந்தங்கள், மஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தகவல்:- #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டை_மேற்கு 15-12-2019
ஆட்டோவில் தவறவிட்ட 10 பவுன் நகையை ஒப்படைத்த மஜக வினருக்கு பாராட்டு
கோவை.டிச.14.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பாக கோவை மாநகர் முழுவதும் புதிய பாதை என்ற பெயரில் மீட்டர் ஆட்டோ சேவை நடைபெற்று வருகிறது, MJTS ஆட்டோ ஒன்றில் நேற்று மாலை ஒரு தம்பதியினர் பயணம் செய்யும் போது தன் 10 சவரன் நகை இருந்த கைப் பையை ஆட்டோவிலேயே தவற விட்டு சென்றுவிட்டனர். இரவு பணி முடிந்து ஆட்டோவை நிறுத்தும் போது MJTS ஆட்டோ ஓட்டுனரான காளிதாஸ் பின் இருக்கைக்கு பின்னால் கைப்பை இருப்பதை பார்த்து திறந்து பார்த்துள்ளார். அதில் நகைகள், பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது, யார் விட்டு சென்றது என்று தெரியாமல் உடனே மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கைப்பையை ஒப்படைத்துள்ளார். தாமதமாக தாங்கள் வைத்து இருந்த நகை பையை காணவில்லை என்பதை அறிந்து அந்த தம்பதியினர் தேட தொடங்கியுள்ளனர். கோவையை பொருத்த வரை MJTS மீட்டர் ஆட்டோ என்பது அனைவரும் அறிந்து நம்பிக்கையுடன் செல்லும் ஒரு ஆட்டோ, தங்கள் பையை ஆட்டோவில் தான் விட்டுள்ளோம் என்பதை உறுதி செய்து உடனடியாக