புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திருத்தம் செய்யக்கோரி! கோவையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கும் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும்.

இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும்.

கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவர் உரையாற்றும் போது1955ல் இருந்து நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டத்தை பொருளாதார தோல்விகளை மறைப்பதற்காகவும் மதச்சாற்பற்ற அரசு என்று உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய இந்திய தேசத்தை காவி தேசம் என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்தை வன்மையாக
கண்டிக்கிறோம் இந்த சட்டத்திருத்தத்தில் நேபாளத்தில் பாதிப்புக்குள்ளான கிறிஸ்துவர்களையும், ஈழத்தமிழர்ளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மர், நாட்டின் இஸ்லாமியர்களையும் இன, மொழி, மதரீதியாக பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சட்டதிருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசினார்.

இதில் மாநில கொள்கை விளக்க அணி செயலளர் கோவை நாசர், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கோவை அப்துல்பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன்,மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், தொழிற் சங்க நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
15.12.19