சென்னை.நவ.16.., சென்னை IIT யில் பயின்ற மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த நிகழ்வு நாட்டையே உலுக்கியுள்ளது. தற்போது இது கொலையாக இருக்குமோ என்ற ஐயமும் வலுப்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, இப்பிரச்சனையை தமிழக சிறுபான்மையினர் ஆணையத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன் முதன்மை செயலாளர் திரு.சுரேஷ்குமார் IAS அவர்களிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் இது தொடர்பாக மனு அளித்தனர். அப்போது சிறுபான்மை ஆணைய மாநில துணைத் தலைவர் ஜவஹர் அலி உடனிருந்தார். இதை விசாரிக்கும் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட அனைவரையும் நேரில் அழைத்து விசாரிக்கும் வலிமை இந்த ஆணையத்திற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா லத்தீபுக்கு நீதி தேடும் அறப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய அம்சமாகும். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 15-11-2019
Month:
ஆதரவற்ற ஜனாசாவை பெற்று நல்லடக்கம் செய்த மஜகவினர்
சென்னை.நவ.14.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையின் அனுமதியோடு ஜனாஸாவை சென்னை ராயப்பேட்டை கப்ர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடன் சென்ட்ரல் பாவா மற்றும் இளையான்குடி மைதீன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #சென்னை 14-11-2019
ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை….! தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! : மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
சென்னை ஐ.ஐ.டி யில் முதலாம் ஆண்டு மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்திருப்பது ஆழ்ந்த வேதனையை தந்திருக்கிறது. அவரது அலைபேசியில் தற்கொலைக்கு காரணமாக, மாணவி குறிப்பிட்டுள்ள இரண்டு பேராசிரியர்களை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். கடந்த ஓர் ஆண்டில் ஐ.ஐ.டி.யில் நிகழும் ஐந்தாவது தற்கொலை சம்பவம் இது. இதன் மூலம் ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பது உறுதியாகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இனி ஒரு சம்பவம் இது போல, இனி நடக்காதிருக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியமாகும். இதுபோன்ற சம்பவங்கள் உயர்கல்வி பயிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகிறது. பெண்கள் மீது தொடரும் இதுபோன்ற வன்முறைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் உறுதியான , சட்ட வழியிலான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.. வசந்தமிக்க எதிர்காலத்தை தொலைத்து, சூழ்நிலை அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் அவர்க ளின் குடும்பத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்
ஜமாத்துல்உலமாதலைவர் – மஜகபொதுச்செயலாளர் சந்திப்பு!
நவ.12, தோப்புத்துறைக்கு மீலாது சமூக நல்லிணக்க விழாவிற்காக ஜமாத்துல் உலமா தலைவர் கண்ணியத்திற்குரிய காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்கள் வருகை தந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அழைப்பினை ஏற்று அவர்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தார்கள். நடப்பு நாட்டு நிகழ்வுகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பாபர் மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பு குறித்து, பரவலாக விமர்சனங்களும், அதிருப்திகளும் நிலவும் நிலையில், முஸ்லிம் சமூகம் அமைதி மற்றும் நாட்டு நலன் கருதி சகிப்புத்தன்மையுடன் கண்ணியமாக இதை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்றும் இது சகோதர சமூகங்களை சேர்ந்த பலராலும் பாராட்டப்படுகிறது என்றும் பேசினர். முஸ்லிம்களின் பொறுமையை சில சங்பரிவார ஆதரவு நபர்கள் கிண்டலடித்து வம்புக்கு இழுத்தப் போதும், சமுதாய மக்கள் நிதானம் இழக்காமல் கண்ணியம் காத்ததை, இந்து சமுதாய சகோதரர்களும், முற்போக்காளர்களும் வரவேற்பதும், முஸ்லிம்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதும் முதிர்ச்சியான நிகழ்வுகள் என்றும் இருவரும் உரையாடினர். நிதானம் என்பது கோழைத்தனமல்ல, அது பொறுப்புணர்ச்சி என்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியதை ஹஜ்ரத் அவர்கள் மிக சரியான கருத்து என வரவேற்றார்கள். மீலாது விழாக்களை சமூக நல்லிணக்க மாநாடுகளாகவும்,
உற்சாகமாக நடைப்பெற்ற திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்
திருவள்ளூர்.நவ.10, மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் அக்பர் உசேன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் கலந்துக்கொண்டு மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தின் தீர்மானமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு நோயிலிருந்து விடுபட மருத்துவ குணம் கொண்ட நிலவேம்பு குடிநீர் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் நகர ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் பக்ருதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசீன், பஷீர் மற்றும் தகவல் தொழில்நுட்டப அணி செயலாளர் இலியாஸ், இளைஞரணி செயலாளர் கரிமுல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம், 10-11-2019