ஆதரவற்ற ஜனாசாவை பெற்று நல்லடக்கம் செய்த மஜகவினர்

சென்னை.நவ.14.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையின் அனுமதியோடு ஜனாஸாவை சென்னை ராயப்பேட்டை கப்ர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடன் சென்ட்ரல் பாவா மற்றும் இளையான்குடி மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#சென்னை
14-11-2019