சிவகங்கை.நவ.19.., முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் MLA மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். மஜக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களையும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்களையும் தனது இல்லத் திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று அழைப்பு கொடுத்தார்கள். மனிதநேய சொந்தங்களுடன் சிறிது நேர நல்லெண்ண உரையாடலுக்குப் பின் தனது திருவாடானை தொகுதிக்கு புறப்பட்டுச் சென்றார். உடன் மஜக நகரச் செயலாளர் உமர் கத்தாப், பொருளாளர் முபாரக், கான்சா ஜமால், வாணியம்பாடி அக்மல், வைத்தியர் முஸ்தபா, கான்சா உஸ்மான், நஸிர், தப்பாத்தை சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை 18-11-2019
Month:
படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும்! கவிதை தேன் நூல் வெளியீட்டுவிழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA பேச்சு!
நவ.19, கவிஞர் காரை ஜின்னா அவர்கள் எழுதிய "கவிதை தேன்" என்ற நூலை நாகூரில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் MGK நிஜாமுதீன் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு பொதுச் செயலாளர் பேசியதாவது:- https://m.facebook.com/story.php?story_fbid=2099654636800967&id=700424783390633 நூல் வெளியீட்டு விழாக்கள் குறைந்து வருவதும், அதில் பார்வையாளர்கள் குறைந்து வருவதும் ஆரோக்கியமான விஷயமல்ல. அது போல், நூல் வாசிப்பாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையில், படைப்பாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முதிர்ச்சிமிக்க சமூக அமைப்பில் இது குறித்து ஆராய வேண்டும். கவலைப்பட வேண்டும். நூல் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கருதி பலரும் அஞ்சும் நிலை உருவாகி உள்ளது. மலையாளம், வங்கம், மராட்டிய மொழிகளில் நூல்கள் வெளியாகி, ஒரே வருடத்தில் பல பதிப்புகளை காணுகின்றன. தமிழில் அந்த நிலை குறைந்து வருகிறது. தமிழக முஸ்லிம் சமூகம் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பணி ஆற்றியுள்ளது. தற்போது இதில் ஒரு சுணக்கம் நிலவுகிறது. நாகூர் என்பது பல கவிஞர்களை, இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை, கலை படைப்பாளிகளை தந்த ஊர். நாகூர் அனீபா, கலைமாமணி கவிஞர் சலீம் ஆகியோர்
மஜக மாநிலபொருளாளருடன் இராமநாதபுரம் மாவட்ட நிருவாகிகள் சந்திப்பு..!
சிவகங்கை.நவ.19.., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் அவர்களை இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் பரமக்குடி நகர நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பரமக்குடி நகர் முழுவதும் வார்டு கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்தும். விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ், பரமக்குடி நகரச் செயலாளர் எமனை சாகுல், நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி கான், நகர மாணவர் இந்தியா செயலாளர் கனிபா, எமனேஸ்வரம் இளைஞரணிச் செயலாளர் இஷாம் மற்றும் பசீர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #இராமநாதபுரம் 18-11-2019
விருதுநகர் மாவட்டசெயற்குழு கூட்டம்..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விருதுநகர்.நவ.18.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.11.2019 அன்று சிவகாசியில் விஸ்வகர்மா திருமண மஹாலில் சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.,M.Com., தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, இறுதியாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்தொழில்நுட்பஅணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 18.11.2019
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் இலவச கண் சிகிச்சை முகாம்..! மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன்ரசீது துவக்கிவைத்தார்..!!
தென்காசி., நவ.17 தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள அச்சன்புதூர் புனித ஜான்ஸ் நர்சரி, பிரைமரி பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்கள். இம்முகாமிற்கு தென்காசி மாவட்ட பொறுப்பாளர் பீர் மைதீன் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் கமால்தீன், துணைச் செயலாளர்கள் முகம்மது ரியாஸ், ஷேக் முகம்மது, செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர் முகம்மது ஷாபீக், இளைஞரணிச் செயலாளர் முகம்மது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் முகம்மது நாசர் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவச கண்சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். அச்சன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதில் 40 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 30 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.ஆர்.சாகுல் ஹமீது, சேகரத் தலைவர்