காஞ்சி.நவம்பர்.22, காஞ்சிபுரம் மாவட்டம் திரூப்போரூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அண்ணா சமுதாய நலக்கூடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, கேளம்பாக்கம் நிழல் தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் அகா்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தியது. இம்முகாமிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் கே.அப்துல் சா்தாா் தலைமை தாங்கினாா். மாநில இளைஞரணி துணைச் செயலாளா் N.அன்வா் பாஷா, திரூப்போரூா் ஒன்றிய பொறுப்புகுழு நெய்னா முஹம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்கள். கேளம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கிராம கல்விக்குழு தலைவருமான டாக்டா் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளா் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள். கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார்கள். இம்முகாமில் காஞ்சி தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் H.அப்துல் ரஷீத், காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார், தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், பாஷா, காஞ்சி கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன், பரக்கத் அலி, முகமது ரபீக், சபியுல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் இனாயத் மற்றும்
Month:
மஜக தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக்கூட்டம்..!
தூத்துக்குடி.நவ.22.., மனித நேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (21-11-2019) மாலை 4:30 மணியளவில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, காதர்சாகிப், நகர நிர்வாகிகள் S.M.ஜிப்ரி, மீரான், அப்துர்ரஹ்மான், இப்னுமாஜா, சம்சுதீன் ஒன்றிய செயலாளர்கள் மீராசாகிப், பூபதி உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் காயல்பட்டினம் வருகை தந்துள்ள இணை பொதுச்செயலாளர் மொளவி J.S.ரிஃபாய் ரஷாதி அவர்களை நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_மாவட்டம் 21-11-2019
சென்னையில் பாபர்மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பை கண்டித்து பாசிசஎதிர்ப்பு கூட்டணி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..!
இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாபர் மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பை கண்டித்து, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திரு.பழ நெடுமாறன் தலைமையில் நடைப்பெற்றது. விசிக சார்பில் டாக்டர்.திருமாவளவன் MP, த.வா.க சார்பில் வேல்முருகன், த.கொ.இ.பே. சார்பில் தனியரசு MLA, மமக சார்பில் பேரா.ஜவாஹிருல்லாஹ், SDPI சார்பில் தெஹ்லான் பாகவி, மஜக சார்பில் ஹாரூன் ரசீது, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இது தவிர திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கொளத்தூர் மணி, மே-17 சார்பில் திருமுருகன் காந்தி, தமுமுக சார்பில் ஹாஜாகனி, INTJ சார்பில் S.M.பாக்கர், SDPI நெல்லை முபாரக், இயக்குனர் கௌதமன், சுப உதயகுமார், பேராசிரியர் அ.மார்க்ஸ், தியாகு, K.M.சரீப் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர். பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டு, ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகையில் ரயில் போக்குவரத்து அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் : மு.தமிமுன்அன்சாரி MLA உறுதி
நாகை.நவ.21.., தென்னிந்தியாவின் முதல் ரயில் தடம் பதிக்கப்பட்ட ஊர் நாகப்பட்டினமாகும். ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய ரயில்வே கம்பனி (SIRC) நாகப்பட்டினத்தில் பதிவு செய்யப்பட்டு 1861 முதல் 1875 வரை இயங்கி வந்தது. இந்தியாவின் முதல் அகலப் பாதையும் இங்கு தான் அமைக்கப்பட்டிருந்தது.பிற இடங்களில் மீட்டர் கேஜ் பயன்பாடு இருந்ததால், பிறகு இதுவும் மீட்டர் கேஜாக மாற்றப்பட்டது. தற்போது சென்னை, எர்ணாகுளம், கோவா, பெங்களுர், மும்பை ஆகிய ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. திருச்சிக்கு 3 பாசஞ்சர் ரயில்களும், தஞ்சைக்கு ஒரு பாசஞ்சர் ரயிலும் இயங்கி வருகிறது. காரைக்காலும், வேளாங்கண்ணியும் முக்கிய இணைப்பு மையங்களாக உள்ளது. இந்நிலையில் நாகையில் ரெயில்களின் பயன்பாடுகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என நாகை - நாகூர் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். காரைக்கால் முதல் திருச்சிக்கு காலை 6 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், மாலை 7 மணிக்கு அங்கிருந்து திரும்ப ஒரு ரயிலும், நாகையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு ரயிலும் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்தனர். அது போல் காரைக்கால் - பேரளம் ரயில் தட பணிகளை
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளராக. H.தமீமுன் அன்சாரி அலைபேசி: 8098719306 மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக. P.M.சாகுல் ஹமீது அலைபேசி: 9994837856 மாவட்ட வழக்கறிஞரணிச் செயலாளராக. C.S.முஹம்மது இஸ்மாயில் அலைபேசி: 9843220847 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கிறேன். இவண். மு.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளார் மனிதநேய ஜனநாயக கட்சி. 20-11-2019