இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாபர் மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பை கண்டித்து, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திரு.பழ நெடுமாறன் தலைமையில் நடைப்பெற்றது.
விசிக சார்பில் டாக்டர்.திருமாவளவன் MP, த.வா.க சார்பில் வேல்முருகன், த.கொ.இ.பே. சார்பில் தனியரசு MLA, மமக சார்பில் பேரா.ஜவாஹிருல்லாஹ், SDPI சார்பில் தெஹ்லான் பாகவி, மஜக சார்பில் ஹாரூன் ரசீது, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இது தவிர திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கொளத்தூர் மணி, மே-17 சார்பில் திருமுருகன் காந்தி, தமுமுக சார்பில் ஹாஜாகனி, INTJ சார்பில் S.M.பாக்கர், SDPI நெல்லை முபாரக், இயக்குனர் கௌதமன், சுப உதயகுமார், பேராசிரியர் அ.மார்க்ஸ், தியாகு, K.M.சரீப் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டு, ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.