நவ.25, திருச்சி - தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமாவும், ஜெனரல் பஜார் மற்றும் பென்ஷனர் தெரு மஸ்ஜித் நிர்வாகமும் இணைந்து நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜமாத்துல் உலமா சபை திருச்சி மண்டல பொறுப்பாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை கோடம்பாக்கம் ரஹ்மானியா மஸ்ஜித் தலைமை இமாம் சதக்கத்துல்லா பாக்கவி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். திருச்சி மாநகரில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் முத்தவல்லிகளும், உலமாக்களும், ஜமாத்துகளும் திரண்டிருந்த அந்த நிகழ்வில், அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்டச் செயலாளராக. H.செய்யது இப்ராஹிம் த/பெ:சாகுல் அமீது 8/A வசந்தம் நகர் குனியமுத்தூர் கோவை.641008 அலைபேசி:9500758112 மாவட்ட துணைச் செயலாளராக. A.அசாருதீன் த/பெ:அப்துல்காதர் நெ,15 மகாராஜா காலனி குனியமுத்தூர் கோவை.641008 அலைபேசி:8098220999 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25-11-2019
மஜக கோவை வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்!!
கோவை:நவ.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாபர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், முஹம்மது அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் அராபத், உமர்பாருக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், மக்கள் நலப்பணிகளை முன்னெடுப்பது குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினர். இதில் மாவட்ட அணி, நகரம், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர் மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் EMS.ரபிதீன், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைவடக்குமாவட்டம் 24.11.19
வடகரை ஊராட்சிக்கு 55 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்பாடு : மு.தமிமுன் அன்சாரி MLA
நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சிக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்தார். அங்கு பொது மக்கள் பெரியோர்களை சந்தித்து மனுக்களை பெற்றார். இங்கு உயர்நிலை தண்ணீர் தேக்க தொட்டி, 300 மீட்டர்க்கு தார் சாலை அமைத்தல், போர் வெல், புதிதாக மின்மாற்றி அமைத்தல், NRGC திட்டத்தின் கீழ் சுமார் முப்பது லட்சத்திற்கு குளத்தை சரி செய்து படித்துரை அமைத்தல் போன்ற சுமார் 55 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். அங்கியிருந்த படியே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு ஐமாத்தார்கள் பொது மக்கள் MLA அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர் தகவல் மஜக வடகரை ஊடக பிரிவு
ஏனங்குடி ஆதலையூர் கேதாரிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை.
நவம்பர் 22. இன்று நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்திற்கு வருகை தந்து பொதுமக்கள் ஜமாத்தார்களை சந்தித்தார். இந்த ஊரில் ஏற்கனவே நலத்திட்ட உதவிகள் செய்து உள்ள நிலையில் ஜமாத்தார்களின் வேண்டுகோளை ஏற்று மேலப்பள்ளி முன்புரம் தனது சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் .3.5 லட்சம் மதிப்பிட்டில் Paver Black கற்கள் விரைவில் அமைத்துதர ஏற்பாடு செய்தார். மேலும் மேலப்பள்ளி பண்டகசாலை தெருவில் ஜனவரிக்கு மாதத்தில் தார்சாலை அமைத்துதர உறுதியளித்தார். அதன் பிறகு கேதாரிமங்கலம் வருகை தந்து பொதுமக்கள் ஜமாத்தார்களை சந்தித்தார். அங்கு 10 ஆயிரம் லிட்டர் உயர்நிலை தண்ணிர் தேக்க தொட்டிக்கு அங்கியிருந்த BDOவை தொடர்பு கொண்டு திட்டமிடபட்டு தனது சட்டமன்ற நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பிற்கு தண்ணிர் தொட்டி அமைத்து தர ஏற்பாடு செய்தார். பின்பு ஏனங்குடி அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார். 107 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தை சுகாதாரதுறை மூலம் சீரமைக்க உறுதியளித்தார். அதிரடியாக செயல்பட்டு துரித நடவடிக்கை எடுத்த MLA விற்கு அங்கு கூடியின்ற சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிட்டனர். தகவல் மஜக ஒருங்கிணைந்த ஏனங்குடி