நவம்பர் 22. இன்று நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்திற்கு வருகை தந்து பொதுமக்கள் ஜமாத்தார்களை சந்தித்தார். இந்த ஊரில் ஏற்கனவே நலத்திட்ட உதவிகள் செய்து உள்ள நிலையில் ஜமாத்தார்களின் வேண்டுகோளை ஏற்று மேலப்பள்ளி முன்புரம் தனது சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் .3.5 லட்சம் மதிப்பிட்டில் Paver Black கற்கள் விரைவில் அமைத்துதர ஏற்பாடு செய்தார். மேலும் மேலப்பள்ளி பண்டகசாலை தெருவில் ஜனவரிக்கு மாதத்தில் தார்சாலை அமைத்துதர உறுதியளித்தார்.
அதன் பிறகு கேதாரிமங்கலம் வருகை தந்து பொதுமக்கள் ஜமாத்தார்களை சந்தித்தார். அங்கு 10 ஆயிரம் லிட்டர் உயர்நிலை தண்ணிர் தேக்க தொட்டிக்கு அங்கியிருந்த BDOவை தொடர்பு கொண்டு திட்டமிடபட்டு தனது சட்டமன்ற நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பிற்கு தண்ணிர் தொட்டி அமைத்து தர ஏற்பாடு செய்தார்.
பின்பு ஏனங்குடி அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.
107 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தை சுகாதாரதுறை மூலம் சீரமைக்க உறுதியளித்தார். அதிரடியாக செயல்பட்டு துரித நடவடிக்கை எடுத்த MLA விற்கு அங்கு கூடியின்ற சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிட்டனர்.
தகவல்
மஜக ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளை