டிச.11., மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது கூறியதாவது.. திராவிடக் கட்சிகளில் பெரிய கட்சியாக அதிமுக திகழ்கிறது. பொன்மனச்செம்மல் MGR அவர்கள் உருவாக்கிய, மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த அதிமுக சிறப்பாகவும்,வலுவாகவும் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி விரும்புகிறது. அம்மா அவர்களின் மரணம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது. இப்போது அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் யார் ?என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் ஆதிக்க சக்திகள் அதிமுகவை கபளீகரம் செய்யவும்,அதை பிளவுப்படுத்தவும் முயல்வதாக செய்திகள் வருகின்றன. சமூக இணைய தளங்களில் திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக வலுவோடு செயல்பட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.எனவே அதிமுகவை சிறப்பாகவும் ,கட்டுக் கோப்பாகவும் வழி நடத்த அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா அம்மா அவர்கள் வருவதுதான் சிறந்தது என தோழமை அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சி விரும்புகிறது. காரணம் 33 ஆண்டு காலமாக மறைந்த அம்மா அவர்களோடு அவர் பயணித்திருக்கிறார்.பல அரசியல் முடிவுகளில் பங்கேற்றிருக்கிறார்.அவரது எண்ண ஓட்டங்களை அறிந்தவர்.கட்சியை அவர் எவ்வாறு வழிநடத்தினார் என்பது நன்கு தெரியும். மேலும் அதிமுக நிர்வாகிகளோடும்,தொண்டர்களோடும் தொடர்பில்
Month:
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மாநாட்டு அழைப்பு…
அன்புள்ளம் கொண்ட மனிதநேய சொந்தங்களே குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மாநாட்டு அழைப்பு குவைத் மன்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் *சமூக நீதி மாநாடு* எதிர் வரும் 23/டிச/2016 வெள்ளிக்கிழமை *தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கத்தில்* நடைபெற உள்ளது. தாயகத்தில் இருந்து வருகை புரியும் கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ. *M.தமிமுன் அன்சாரி* *MA MLA* அவர்களும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ. *K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். *பல்வேறு கட்சிகள், இயக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்* அனைவரும் வருகைதந்து குவைத் மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி சிறப்பித்து தர அன்போடு அழைக்கிறது. *போர் குணம் படைத்த மாநாட்டின் மனிதநேய சொந்தங்களே* *புதிய பாதை புதிய பயணத்தில் சமூக நீதி ஓங்கட்டும்.* *குவைத்தை குலுங்கவைக்க அணிதிரள்வோம்.* அழைப்பின் மகிழ்வில் *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
நாகையில் அமைதி ஊர்வலம்…
டிச.08., நாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களும், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் அவர்களும், அதிமுக நகரச் செயலாளர் சந்திர மோகன் அவர்களும், முன்னாள் நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திர மோகன் அவர்களும் கலந்துக் கொண்டனர். மேலும், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகை மாரி உள்பட பல்வேறு கட்சி பிரதிகளும் பங்கேற்றனர். வழியெங்கும் மக்கள் வருகைத் தந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
துக்ளக் சோ மரணம் மஜக தலைவர்கள் நேரில் மரியாதை…
டிச.07., துக்ளக் ஆசிரியர் சோ காலமானதையொட்டி அவரது வீட்டில் இருந்த உடலுக்கு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாலர் S. ஹாரூண் ரசீது, மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் சென்று பார்வையிட்டு மரியாதை செய்தனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பொதுச்செயலாளர் பேசியதாவது; ஐயா சோ அவர்களின் அரசியலின் மீது எங்களுக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. அவரது பாஜக சார்பு அரசியலை நாங்கள் விமர்சித்து வந்திருக்கிறோம். அதே நேரம் அவர் இந்துத்துவ வன்முறைகளை எதிர்த்திருக்கிறார். 1992 டிசம்பர் 6_ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போது அதை கண்டித்ததோடு, அத்வானி போன்றவர்கள் இப்படி செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார். தனது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த வார துக்ளக்கின் அட்டைப் படத்தை கருப்பாக வெளியிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். தலையங்கத்தில் கடுமையாக அச்சம்பவத்தை கண்டித்தார். அவர் துக்ளக் பத்திரிக்கையை ஆபாசம், கிசுகிசு இல்லாமல் நடத்தினார். பளப்பான அட்டை போடாமல், வழவழப்பான தாள் இல்லாமல் கருத்துகளை மட்டுமே நம்பி இத்துணை ஆண்டுகாலம் நடத்தியது ஆச்சர்யம். அதை வாங்குபவர்கள் முதலில் தலையங்கத்தையும், கேள்வி-பதிலையும்தான் பாடிப்பார்கள். அவர் பத்திரிக்கையாளர், நாடக நடிகர், சினிமா நடிகர் என்பதையெல்லாம் தாண்டி அரசியலில் பல
முதலமைச்சர் அம்மாவின் உடலுக்கு மஜக தலைவர்கள் மரியாதை…
டிச.06., தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீத், மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம்.அனீஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். லட்சக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தகவல் : மஜக ஊடகபிரிவு