Month:
திட்டச்சேரி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் நாகைMLA மனு
சென்ற வாரம் திட்டச்சேரி வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது பெறப்பட்ட மனுக்கள், மக்கள் கோரிக்கைகள் தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டர் அவர்களை சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர். தகவல், மஜக ஊடகப்பிரிவு திட்டச்சேரி.
காவேரி ரயில் மறியல் போராட்டம் சென்னையில் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் தலைமையில் தடையை உடைத்த மஜகவினர்…
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்... தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பர் என அறிவிக்கப் பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமயில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பீச் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறித்தனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் அரண் போல் நின்று கொடுத்த பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்ற போது சற்று பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மண்ணடி ஈத்கா மசூதி அருகிலிருந்து புறப்பட்ட மஜகவினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது " உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் ஜா தலைமையிலான நிபுணர் குழு அளித்த அறிக்கை தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் ஒருதலைப் பட்சமான அறிக்கையாகவே உள்ளது. பாஜக அரசு அமைத்த
மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று தமிழகம் முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.. #mjk_rail_roko_cavery_issue தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு
சிறைத்துறை அமைச்சருடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு!
இன்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.சண்முகம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்தார். சிறைக் கைதிகளின் மனித உரிமைகள் குறித்தும், அவர்களின் உயிராபத்து நோய்களுக்கு உரிய உயர் சிகிச்சை அளிப்பது குறித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: மஜக ஊடகப்பிரிவு(சென்னை)