தமிழகம்
தமிழகம்
ஏற்காடு தனியார் பேருந்து விபத்து விரைந்து வந்து இரத்தம் வழங்கிய சேலம் மஜகவினர்….
மே,01 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். படுதாயம் அடைந்த பலருக்கும் அதிகமான இரத்தம் தேவைப்பட்டது. தகவல் அறிந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சேலம் மாவட்ட பொருளாளர் ஏ.கே.சதாம் உசேன் அவர்கள் தலைமையில் அம்மாபேட்டை பகுதி செயலாளர் A. சதாம் ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்து 30-க்கும் மேற்பட்ட மஜக-வினர் இரத்த தானம் வழங்கினர். இன்னும் அதிகமாக இரத்தம் தேவைப்பட்டால் எங்களை அழைக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்களிடம் வாக்குறுதி அளித்தனர். மஜக-வினரின் இந்த செயலை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாவட்டம் 01.05.2024.
காங்கிரஸ் பிரமுகர் இல்ல மணவிழா மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று வாழ்த்து….
மே.01., கன்னியாகுமரி காங்கிரஸ் பிரமுகர் திருமண விழா சென்னை புதுக்கல்லூரியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது. மணமகன் Dr. A. சுபஹான் ME.MBA. LLB அவர்களுக்கும் மணமகள் நீதிபதி அப்சல் பாத்திமா மணமகளுக்கும் இடையே நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் வருகை வந்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் EVKS இளங்கோவன் MLA, திருநாவுக்கரசர் MP, விஜய் வசந்த் MP, ராஜேஷ் MLA, ஷாநவாஸ் MLA, ஹஸன் மெளலானா MLA, ஹிதாயத்துல்லா, மல்லை. சத்யா உள்ளிட்டோரும், மஜக நிர்வாகிகளும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை_மாவட்டம் 01.05.2024.
மே தின கொண்டாட்டம் மஜக தலைமையகம் அருகில் தர்பூசனி மோர் பிரியாணி வழங்கி மஜக வினர் உற்சாகம்….
மே.01., இன்று உழைப்பாளர் தினமான மே 1 தினத்தை முன்னிட்டு மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) சார்பில் மஜக தலைமையக வாசலில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து MJTS சார்பில் மோர், தர்பூசனி ஆகியவற்றின் வினியோகத்தை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து காய்கறி பிரியாணி வினியோகத்தை மஜக பொதுச் செயலாளர் மெளலா நாசர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து MJTS மாநில துணைச் செயலாளர் மாத்தூர் இப்ராகிம் தலைமையில் MJTS நிர்வாகிகள் பேருந்து, ஆட்டோ, பைக் ஆகியவற்றில் பயணித்தவர்களுக்கு வாகனங்களை நிறுத்தி தர்பூசணி, மோர் ஆகியவற்றை வினியோகித்தனர். கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு MJTS செய்த இச்சேவை பெரிதும் மகிழ்ச்சியளித்தது. சுமார் ஒரு மணி நேரமாக வினியோக பணிகள் நடைபெற்றது. இதில் MJTS மாவட்ட செயலாளர்கள், ரமேஷ் குமார், பிராங்கிளின், அல்லாபகஷ், வெங்கடேசன், சுலைமான், சங்கர், MJTS மாவட்ட பொருளாளர்கள் இளங்கோவன், இதாயத்துல்லா, MJTS துணைச் செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, ராஜேஷ், சுல்தான் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 01.05.2024.
மே தினம் MJTS கொடியேற்றல் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கொடியேற்றினார் பொதுச்செயலாளர் மெளலா நாசர் உறுதிமொழி வாசிப்பு….
மே-1 இன்று உழைப்பாளர் திருநாளான மே தினத்தை முன்னிட்டு மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கமான MJTS சார்பில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு MJTS மாநில துணைச் செயலாளர் மாததூர் இப்ராகிம் தலைமை வகித்தார். மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கொடியேற்றினார். மஜக பொதுச் செயலாளர் மெளலா.நாசர் அவர்கள் தொழிலாளர் உறுதிமொழியை வாசித்தார். இதில் திரளான MJTS நிர்வாகிகள் பங்கேற்று உறுதிமொழியை திரும்ப கூறினர். இதில் மஜக மாநில செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர்கள் அஸாருதீன், பேரா. சலாம், S.M.நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ரஹ்மான் கான், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் காதர், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கமால், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப் உள்ளிட்ட மாவட்ட, நகர,