சென்னை.ஜன.14., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு SDPI கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் M.M.அப்பாஸ் அவர்கள் வருகை தந்தார். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை அப்பாஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சந்தித்து தமிழ்நாடு பார் கவுன்சிலிங் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டினர். இச்சந்திப்பின் போது மஜகவின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், முஹம்மது சைபுல்லாஹ் , SDPI கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளருமான ராஜா முகம்மது , உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நஃவில், தமிம் மற்றும் ஷேக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை 12.01.18
தமிழகம்
தமிழகம்
ஹார்வேர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கைக்கு மீதி தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும்!
(பகுதி - 3) கடந்த 11.01.2018 அன்று சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது… உலக புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய, தமிழக அரசு பத்து கோடி வழங்கியதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசை தொடர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் இதற்கு நிதியை வாரி வழங்கியுள்ளனர். அப்படி இருந்தும் மூன்று முதல் ஐந்து கோடி வரை பற்றாக்குறை எற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொகையையும் தமிழக அரசே செலுத்தினால் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இந்த அரசை பாராட்டுவார்கள். அதுபோல் கீழடி அகழாய்வு என்பது திராவிட கலாச்சாரத்தையும்,தமிழக பண்பாட்டையும் பின்னனியாக கொண்டது. அப்பணி தொடரும் என அமைச்சர் மா.பாண்டியராஜன் கூறியது பாராட்டதக்கது. இவ்வாறு பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்
முகவை மாவட்டத்தில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
முகவை.ஜன.14., இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது தலைமையில் இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாம்பன் சீனி அஹமது மரக்கையர் மற்றும் ஜாமில் ஆகியோர் இணைந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் I. அப்துல் நசீர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் தேவிப்பட்டினம் சுல்தான் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம். 14.01.2018
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை...) இந்திய நீதித்துறையின் உச்சபட்ச தலைமை பீடத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்களுக்கு எதிராக மூத்த அமர்வு நீதிபதிகள் செல்ல மேஷ்வர், ஜோசப் குரியன், ரஞ்சன் கோஜாய் மற்றும் மதன் பி.லோகூர் ஆகிய நால்வரும் கிளார்ந்தெழுந்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடந்திராத நிகழ்வு. ஒட்டுமொத்த நீதித்துறையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக ஜனநாயக விரோதமாக நடந்து வருவதை இந்த நால்வரின் பேச்சுக்கள் அம்பலப் படுத்திவுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதிகளால் இந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டதில்லை. குற்றம் சுமத்தப்பட்டதும் இல்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் எப்போது மக்கள் மன்றத்தின் முடிவுக்காக விடப்பட்டு விட்டதோ அப்போதே தலைமை நீதிபதி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார். விளிம்பு நிலையில் உள்ள சாதாரண குடிமகன்கூட நீதிக்கான கடைசிப் புகழிடமாக நீதித்துறையையே நம்பி இருக்கிறான். இந்த நிலையில் நீதித்துறையின் உச்சபட்ச ஆதிகாரபீடமே கேள்விக்குறியாகி
மஜகவின் தமிழர் திருநாள் வாழ்த்து செய்தி..!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி...) பசும் வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை பெருபான்மையாக கொண்டது நமது தமிழ்நாடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர் அவர்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்" என்று விவசாயத்தை உயர்வுப்படுத்தி கூறினார். விவசாயத்தை செம்மைப்படுத்தும் மண், மழை, கால் நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொன்மை காலத்தில் தமிழர்கள் முன்னெடுத்த வழிபாடுகளற்ற நாகரீகம்தான் பொங்கல் திருநாள் என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனை அறுவடை திருநாள் என்றும் சொல்வதுண்டு. விவசாயம் மூலம் பொருளாதாரம் குவியும் காலம் இது என்பதால்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றார்கள். தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் இத்திருநாளில் இயற்கை விவசாயத்தை வளர்க்கவும், தண்ணீர் மேலாண்மை ஒழுங்குப்படுத்தவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் உறுதி ஏற்போம். தமிழர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர். மனிதநேய ஜனநாயக கட்சி, 13.01.2018.