மார்ச்.23., நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தஞ்சை மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை தஞ்சை மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் தலைமையில் மஜக-வினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர். பரபரப்பான நிகழ்வுகளுக்கு மத்தியிலும் மஜக மாவட்ட நிர்வாகிகள் என்றதும் அவர் உடனே சந்தித்தது அங்கு அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, தர்ஷன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர் . தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_it_WING #தஞ்சை_மத்திய_மாவட்டம் 23.03.2024.
தமிழகம்
தமிழகம்
நாகை நாடாளுமன்ற மஜக ஆலோசனை கூட்டம்!! துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு…
மார்ச்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் மற்றும் மாநில துணை செயலாளர் போராவூரணி சலாம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். நாகை பாரளுமன்ற தொகுதியில் INDIA கூட்டனியின் வெற்றி வேட்பாளர் செல்வராஜ் அவர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், நாகை மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன், அவைத் தலைவர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஜெயினுதின், ஷேக் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் அகமதுல்லா, கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது, பேபி ஷாப் (எ) ஃபக்ருதீன், பாலமுரளி மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர் நாச்சிகுளம் ஜான் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #தேர்தல்_பணி_குழு #நாகை_நாடாளுமன்ற_தொகுதி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJKitWING #நாகை_மாவட்டம் 22.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… மத்திய சென்னை கூட்டணி கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் மஜக நிர்வாகிகள் பங்கேற்பு….
மார்ச்.22., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மத்திய சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதியின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் ஓட்டேரியில் நடைப்பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,மத்திய சென்னை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன்,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்தியசென்னை_மாவட்டம் 22.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… வேலூரில்… திமுக பொதுச்செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
மார்ச்.22., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான திரு. துரை முருகன் அவர்களை மஜக வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் மற்றும் பொருளாளர் ராம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது வேலூரில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 22.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… தூத்துக்குடியில்… அமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
மார்ச்.22., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா R.ராதாகிருஷ்ணண் அவர்களை மஜக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எம். அசன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துகுடி_மாவட்டம் 22.03.2024.