தமிழக முதல்வருடன் சந்திப்பு… தஞ்சை மஜகவினர் உற்சாகம்..

மார்ச்.23.,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தஞ்சை மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை தஞ்சை மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் தலைமையில் மஜக-வினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர்.

பரபரப்பான நிகழ்வுகளுக்கு மத்தியிலும் மஜக மாவட்ட நிர்வாகிகள் என்றதும் அவர் உடனே சந்தித்தது அங்கு அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, தர்ஷன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர் .

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_it_WING
#தஞ்சை_மத்திய_மாவட்டம்
23.03.2024.