மார்ச்.23.,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களை மஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT.ஜாபர் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் A.சாகுல் அமீது, மாவட்ட இளைஞரணி செயலாளர் S.ஜாபர் அலி, இளைஞரணி மாவட்ட பொருளாளர் S.முகமது ரபி, இளைஞரணி நகர செயலாளர் S.ஆரீஸ், துணை செயலாளர் சையது அலி, மனித உரிமை அணி நகர் செயலாளர் S.அபுதாஹிர், ஆகியோர் உடன் இருந்தனர்
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
23.03.2024.